28.10.2013, காஞ்சி ஒன்றியதிற்குட்பட்டது மாகறல்
கிராமம். மாகறல் கிராமத்தின் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் முகாம்
செயலாளராக தோழர் செந்தில் களப்பணியாற்றி வருகிறார். மாகறல் கிராமத்தில்
உள்ள காவல் நிலைய துணை ஆய்வாளர் இரவு ரோந்து செல்லும் போது தோழர் செந்தில் அவருடைய சொந்த இடத்தில் இருந்துள்ளார். இது பெரும்பாலும் மக்கள் நடமாடும் இடமே.
காஞ்சி - மாகறல் முகாம் செயலாளர் மீது காவல்துறையினர் தாக்குதல்.
இருந்தாலும் தோழர் செந்தில் அங்கு இருப்பதைக் கண்ட காவல் துணை ஆய்வாளர் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாகறல் முகாம் செயலாளர் தோழர் செந்திலை அடித்ததுடன் ஆபாசமான வார்த்தைகளால் பேசியுள்ளார். நடந்த சம்பவத்தை தனது கட்சியினருக்கு தெரிவிக்க, காலை பேசுவோம் என்று சொல்லியுள்ளனர்.
மறுநாள் இன்று காலை மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் அவர்களின் ஆலோசனையுடன் மாகறல் காவல் நிலையத்திற்கு விடுதலைச்சிறுத்தைகளின் காஞ்சி ஒன்றிய, நகர மேலிடப் பொறுப்பாளர் பாசறை செல்வராசு, ஒன்றிய அமைப்பாளர் ஸ்டான்லி ஆகியோர் துணை ஆய்வாளர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிப்போம், மாவட்டம் தழுவிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்று பேசினார்கள். ஊடக மையம் ஆதவன், ஆசூர் நிர்மல், உத்திரமேரூர் ஒன்றிய நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
என்ன நடக்கும் என்று நாளை தெரியும்.
மாகறல் காலனியை சேர்ந்த அனைத்துக் கட்சி தோழர்களும் நமது விடுதலைச்சிறுத்தைகள் கட்சி முகாம் செயலாளர் தோழர் செந்திலுக்கு ஆதரவாக பேசியது, அவருடைய அணுகுமுறையும் அவர் ஏற்றுக்கொண்ட தலைமையின் சிறப்பான வழிக்காட்டுதலும் தானே இதற்கு காரணம்.
----------------------------------------------------------------
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.