காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம், தொன்னாடு
கிராமத்தில் வாழும் தலித் மக்களுக்கு கோவிலில் நுழையத் தடை, குளத்தில் நீர்
எடுக்கத் தடை. சேரி மக்களின் அடிப்படை உரிமைகளை கேட்டு
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் தொன்னாடு கிராமத்தில் முற்றுகை போராட்டம்.
தொன்னாடு கிராமத்தில் உள்ள இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான பொன்னியம்மன் கோவிலில் நுழையத் தடை, சாமி வழிபட தடை, கூழ்வார்த்தல் நிகழ்வில் பங்கேற்க தடை, கோவில் தேர் சேரிக்குள் வர அனுமதி மறுப்பு, கோவில் அறங்காவலர் குழுவில் தலித் மக்கள் புறக்கணிப்பு, ஊர்ப் பொதுக் குளத்தில் பாசிகளை அகற்றும் 100 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் சேரி மக்கள் புறக்கணிப்பு, ஊர் மக்கள் சேரிப் பகுதிக்குள் வந்து ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை செய்வதில்லை, ஆதிதிராவிடர் மற்றும் இருளர் இன மக்களுக்கு அரசு வழங்கிய வீடுகளை சாதி இந்துக்கள் அத்துமீறி அபகரித்துக் கொண்டு சேரி மக்களின் அனுமதியின்றி அரசாங்கத்துக்கு புறம்பாக மற்றவர்களுக்கு விற்று விடுதல் போன்ற அத்துமீறல்கள் அந்த ஊராட்சி மன்றத் தலைவர் கா.துரைபாபு அவர்களின் துணையுடன் நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த அவலங்களை தொன்னாடு முகாம் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினரும் சேரி மக்களும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் அவர்களிடம் சொல்ல, மாவட்ட செயலாளர் சூ.க.வி அவர்கள் சிறுத்தைகளின் படை சூழ ஊராட்சி மன்றத் தலைவரை முற்றுகையிட்டு சேரிமக்களுக்கு மறுத்து வரும் அடிப்படை உரிமைகளை கேட்டு வாதிட்டனர்.
மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் தலைமையிலான விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் காவல் நிலையத்திலும், வருவாய் அதிகாரிகளிடமும் புகார் அளித்துள்ளனர். அவர்களும் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்.
படங்கள்: தோழர் Eezhamadhan Vck.
----------------------------------------------------------
செய்தி:
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
Kanchi Vck, www.kanchithiruma.net.