Sporty Magazine official website | Members area : Register | Sign in

காஞ்சிபுரத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி - தீண்டாமை ஒழிப்பு முன்னணி இனைந்து ஒருங்கிணைத்த கண்டன ஆர்ப்பாட்டம்.

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :

காஞ்சிபுரத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி - தீண்டாமை ஒழிப்பு முன்னணி இனைந்து ஒருங்கிணைத்த கண்டன ஆர்ப்பாட்டம்.


 
 
 
 
 
தருமபுரி இளவரசன் மரணம் - தற்கொலை அல்ல படுகொலை.
நீதி விசாரணை வேண்டும்.

சம்பந்தப்பட்ட பா.ம.க. சாதிவெறியர்களை கைது செய்து விசாரிக்க வேண்டும்.

வன்கொடுமை தடுப்பு சட்டத்தை வலுப்படுத்த வேண்டும்.

இந்திய அரசியலமைப்பிற்கு எதிராக தொடர்ந்து பேசி வரும் பா.ம.க. ராமதாஸ், அன்புமணி, காடுவெட்டி குரு ஆகியோரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம், தந்தை பெரியார் நினைவு தூண் அருகில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் காஞ்சிபுரம் மேலிட பொறுப்பாளர் பாசறை செல்வராசு அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் தோழர் பாரதி அண்ணா, விடுதலைச்சிறுத்தைகளின் காஞ்சி மாவட்ட துணை செயலாளர் இந்திரா அம்பேத்கர்வளவன், தோழர் லாரன்சு, சி.பி.எம். ஆறுமுகம், சங்கர், விடுதலைச்சிறுத்தைகளின் காஞ்சி நகர செயலாளர் திருமாதாசன், ஒன்றிய செயலாளர் டேவிட், மின்சார வாரியம் சேகர், வாலாசாபாத் நகர செயலாளர் அசோக் குமார், பொருளாளர் வேதகிரி, நகர் பாலாஜி, கண்ணன், சத்யா, மாவட்ட நிர்வாகிகள் ஊடக மையம் ஆதவன், ஏ.வி.ஆர்., செஞ்சுடர், விடியல் வெற்றித்தமிழன், திலீப், ஆட்டோ பாஷா, பகுஜன் சமாஜ் கட்சியின் தோழர் இளங்கவி, கார்த்திக், கன்னியப்பன், செல்வம், லோக் ஜனசக்தி முத்து, மக்கள் மன்றம் தோழர் மகேசு உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் பலர் பங்கேற்று சாதிவெறிக்கெதிராக ஒன்று திரண்டு பா.ம.க. வினரை கண்டித்து பேசினர்.

செய்தி:
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
www.kanchithiruma.net, Kanchi Vck.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...