திருப்புட்குழி
முகாம் தோழர்கள் நேற்று இரவு கோழியாளத்தில் நடைபெற்ற தாத்தா ரெட்டைமலை
சீனிவாசன் பிறந்தநாள் விழாவிற்கு சென்றிருந்த சமயம் சாதி வெறியர்கள் இந்த
செயலை செய்துள்ளனர்.
விடுதலைச்சிறுத்தைகளின் டிஜிட்டல் பேனரை
கிழித்த மேல் ஒட்டிவாக்கம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவனை கைது செய்ய
வலியுறுத்தி காஞ்சி மாவட்ட துணை செயலாளர் இந்திரா அம்பேத்கர்வளவன் அவர்கள்
தலைமையில் 50க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் பாலுச்செட்டிச்சத்திரம் காவல்
நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த சாதிவெறிப்பிடித்த செல்வராஜ் என்பவன் ஏற்கனவே கடந்த 15.04.2013 அன்று
பாலுச்செட்டி பேருந்து நிலையம் அருகில் வைக்கப்பட்டிருந்த புரட்சியாளர்
அம்பேத்கர் படம் பொறிக்கப்பட்டிருந்த பேனரை கிழித்தவன். ஆகவே அவன் மீது
கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் புகார் அளிக்கப்பட்டது.
உடன்
காஞ்சி ஒன்றிய அமைப்பாளர் புத்தேரி மா.ஸ்டான்லி, நகர செயலாளர் திருமாதாசன்,
மாவட்ட நிர்வாகிகள் ஊடக மையம் ஆதவன், திருப்புட்குழி அம்பேத்கர்,
சுந்தரமூர்த்தி, இளமாறன் உள்ளிட்டோர் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து
நடைபெறாமல் இருக்க சமூக விரோதி செல்வராஜ் என்பவனை கைது செய்ய வேண்டும்
என்று காவல் நிலையத்தில் முறையிட்டனர்.
செய்தி:
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
www.kanchithiruma.net, Kanchi Vck.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...