காஞ்சிபுரம் மாவட்டம் கீழம்பி கிராமத்தில் தேசியத்தலைவர் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் சிலையை அவமதித்த சாதி வெறிப்பிடித்த சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும் என்று சம்பவம் நடந்த நாளன்று 02.06.2013 விடுதலைச்சிறுத்தைகளோடு பொதுமக்களும் உண்ணாநிலை போராட்டம் நடத்தி காவல் துறைக்கு கோரிக்கை வைத்த பின்பு பா.ம.க. வை சேர்ந்த 2 சாதி வெறியர்களை கைது செய்தனர். ஆனால் அந்த சாதி வெறியர்களை காவல் துறையினர் அன்று மாலையே விடுவித்துள்ளனர்.
வழக்கு பதிவு செய்து FIR முதல் தகவல் அறிக்கை கொடுத்தப் பின்பும் கூட அந்த 2 சாதி வெறியர்களை காவல் துறையினர் விடுவித்ததைக் கண்டித்தும் சமூக விரோத கும்பலை தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் 400 க்கும் மேற்பட்ட விடுதலைச்சிறுத்தைகளும் கீழம்பி கிராம பொதுமக்களும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைதியான முறையில் நீதி கேட்டு போராட்டம் நடத்தினர்.
போராட்ட குழுவினரிடம் மாவட்ட ஆட்சியரே நேரில் வந்து சந்தித்து பொது மக்களின் மனுவைப் பெற்று கொண்டு சமூக விரோதிகளை கைது செய்து சிறையில் அடைப்பதாக உறுதி அளித்தார்.
அமைதிப் போராட்டத்தை விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் காஞ்சிபுரம் பொறுப்பாளர் பாசறை செல்வராசு அவர்கள், மக்கள் மன்றம் மகேசு, ஜெஸ்சி ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர்.
மேலும் போராட்டத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் காஞ்சி ஒன்றிய அமைப்பாளர் ஸ்டான்லி, செயலாளர் டேவிட், நகர செயலாளர் திருமாதாசன், மின்வாரியம் சேகர், ஊடக மையம் ஆதவன், செஞ்சுடர், ஏ.வி.ஆர், மு.க.திலீப், சத்யா ஆகியோர் பங்கேற்றனர்.
இறுதியாக கட்சியின் கருத்தியல் பரப்பு துணை செயலாளர் வழக்கறிஞர் பார்வேந்தன் அவர்கள் எந்த விதமான அசம்பாவித செயல்களுக்கும் இடங்கொடாமல் அமைதியான முறையில் போராடி நமது உரிமைகளை வென்றெடுப்போம் என்று பொதுமக்களிடம் பேசினார்.
செய்தி:
ஊடக மையம் - விடுதலைச்சிறுத்தைகள் கட்சி,
காஞ்சிவரம் மாவட்டம்.
www.kanchithiruma.net, Kanchi Vck.