Sporty Magazine official website | Members area : Register | Sign in

காஞ்சிபுரம் கீழம்பி கிராமத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை அவமதிப்பு - விடுதலைச்சிறுத்தைகள் உண்ணாவிரதம்.

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :

காஞ்சிபுரம் கிழம்பி கிராமத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை அவமதிப்பு - விடுதலைச்சிறுத்தைகள் உண்ணாவிரதம்.

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சி ஒன்றியம், கிழம்பி கிராமத்தில் வேலூர் செல்லும் சாலையில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை உள்ளது. இந்த சிலைக்கு சில சமூக விரோதிகள் நேற்று இரவில் செருப்பு, துடைப்பம் போன்றவற்றால் மாலை அணிவித்துவிட்டு சென்றுள்ளனர்.

காலையில் இதனைக் கண்ட கிராம பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அவர்கள் இச்சவம்பவம் குறித்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சி காஞ்சி, நகர மேலிட பொறுப்பாளர் பாசறை செல்வராசு அவர்களிடம் கூறினர். விடுதலைச்சிறுத்தைகள் கீழம்பி கிராமத்திற்கு சென்றடையும் முன்பாக காவல் துறையினர் அங்கு சென்று சிலையில் இருந்த செருப்பு மாலையை அகற்றிவிட்டிருந்தனர்.

 
 
 
 
சாதி வெறிப்பிடித்த கும்பலை கைது செய்து வழக்குப் பதிவு செய்து FIR முதல் தகவல் அறிக்கையை எங்களிடம் காண்பித்தால் மட்டுமே நாங்கள் கலைந்து செல்வோம் என்றும் இது போன்ற சம்பவங்கள் மேலும் நிகழாவண்ணம் தேசியத்தலைவர் சிலைகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி பாசறை செல்வராசு அவர்கள் தலைமையில் 200 க்கும் மேற்பட்ட விடுதலைச்சிறுத்தைகளுடன் பொதுமக்களும் அமைதியான முறையில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தனர்.

இதன் பிறகு கிழம்பி கிராமத்தை சேர்ந்த பா.ம.க நிர்வாகிகள் முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் கன்னியப்பன், குமரேசன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் 6 நபர்களின் மீது வழக்குப் பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையை போராட்டக் குழுவினரிடம் அளித்தனர். இதன் பிறகே உண்ணாவிரதத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

உண்ணாவிரதத்தில் புரட்சி பாரதம் கட்சி தோழர்கள் அன்னக்கிளி, சிறுணை பாபு, மக்கள் மன்றம் தோழர்கள் மகேசு, ஜெஸ்சி, பகுஜன் சமாஜ் தோழர் இளங்கவி, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி காஞ்சி ஒன்றிய செயலாளர் டேவிட், நகர செயலாளர் திருமாதாசன், மின்வாரியம் சேகர், தம்பிதுரை, ஊடக மையம் ஆதவன், தொண்டரணி அம்பேத்கர், செஞ்சுடர், பருத்திகுளம் மு.க.திலீப், ஏ.வி.ஆர், சத்யா, வாலாசாபாத் நகர செயலாளர் தோழர் அசோக்குமார், பொருளாளர் தோழர் வேதகிரி ஆகியோர் பங்கேற்றனர்.

செய்தி:
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...