கடந்த 5 வருடமாகவே தொடர்ந்து இவரிடம் பயிலும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 100 சதம் தேர்ச்சி பெற்று வருகின்றனர். குறிப்பாக இந்த வருடம் இவரிடம் ஏகலைவன் டியூஷன் சென்டரில் பயின்ற வாலாசாபாத் செயின்ட் ஜோசெப் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வாலாசாபாத் ஒன்றியத்தில் முதல் 3 இடங்களை பிடித்தனர்.
1. R. சிபா - 492 மதிப்பெண்கள்
2. S. விக்னேஷ் (தலித்) - 488 மதிப்பெண்கள்
3. K. லோகேஸ்வரன் - 486 மதிப்பெண்கள்.
மேலும் வாலாசாபத் அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி தலித் மாணவர் பாக்கியராஜ் - 400 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே 2ஆம் இடம் பெற்றுள்ளார்.
வாலாசாபத் மாசிலாமணி மேல்நிலைப்பள்ளி மாணவர் K. சரவணன் 456 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதலாவது மாணவனாக தேர்ச்சி பெற்றுள்ளார்.
வாலாசாபத் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி P. கனிமொழி 462 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே 5 வது மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார்.
இது மட்டுமல்லாமல் தோழர் அசோக்குமார் நடத்தி வரும் ஏகலைவன் டியூஷன் சென்டரில் பயின்ற 4 மாணவர்கள் கணிதத்தில் 100 மதிப்பெண்களும், 2 மாணவர்கள் அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண்களும், 1 மாணவன் சமூக அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண்ணும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
ஏகலைவன் டியூஷன் சென்டர் நடத்தி வரும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் வாலாசாபாத் நகர செயலாளர் தோழர் அசோக்குமார் மற்றும் அவர் நண்பர்களுக்கும், இவர்களிடம் பயின்ற மாணவ மாணவிகளுக்கும் காஞ்சிபுரம் மாவட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் மிக்க நன்றியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
செய்தி:
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.