Sporty Magazine official website | Members area : Register | Sign in

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி - தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இணைந்து நடத்திய தலித் மாணவர்களுக்கான கலந்துரையாடல்.

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி - தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இணைந்து நடத்திய தலித் மாணவர்களுக்கான கலந்துரையாடல் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாசாபாத் நகரில் சி.எம். திருமண மகாலில் நடைபெற்றது.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் வாலாசாபாத் நகர செயலாளர் தோழர் அசோக்குமார் தலைமை வகித்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி காஞ்சிபுரம் வட்டக்குழு செயலாளர் தோழர் லாரன்சு, பொருளாளர் தோழர் அரிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில குழு உறுப்பினர் தோழர் நீதிராஜன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் காஞ்சி ஒன்றிய, நகர மேலிடப் பொறுப்பாளர் பாசறை செல்வராசு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி காஞ்சி மாவட்ட செயலாளர் தோழர் பாரதிஅண்ணா, துடி இயக்கம் தோழர் ராஜேஷ், காங்கிரசு தோழர் தென்னேரி சுகுமார் ஆகியோர் அரசானை 92 குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு உரையாற்றினர்.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் காஞ்சிபுரம் ஊடக மையம் மதி.ஆதவன், நகர பொருளாளர் தோழர் வேதகிரி, மருத்துவர் தமிழ்க்கனல், தோழர் வில்சன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

கலந்துரையாடலில் 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். குறிப்பாக பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று வாலாசாபாத் ஒன்றியத்தில் முதல் 3 இடங்கள் பிடித்த வாலாசாபாத் செயின்ட் ஜோசெப் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்

1. R. சிபா - 492 மதிப்பெண்கள்
2. S. விக்னேஷ் - 488 மதிப்பெண்கள்
3. லோகேஸ்வரன் - 486 மதிப்பெண்கள்.
ஆகியோருக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.

கலந்துரையாடலின் நிறைவில் தோழர் லோகநாதன் நன்றி கூறினார்.

செய்தி:
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
 
 
 
 
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...