களப்போராளியை தந்த தந்தைக்கு விடுதலைச்சிறுத்தைகளின் செம்மாந்த வீரவணக்கம்.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் அவர்களின் தந்தையார் திரு. எல்ல.கண்ணன் அவர்கள் 07.06.2013 இரவு இயற்கை எய்தினார். அன்னாரது இறுதிச்சடங்கு சூனாம்பேடு, மணப்பாக்கம் இடுகாட்டில் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் வீரவணக்கத்துடன் நடைபெற்றது.
எழுச்சித்தமிழரின் கருத்தியல் களத்தினில் தொடர்ந்து களமாடும் நமது மாவட்ட செயலாளர் களப்போராளி சூ.க.விடுதலைச்செழியன் அவர்களை தந்த தந்தை எல்ல.கண்ணன் அவர்களுக்கு வீரவணக்கம்.
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
www.kanchithiruma.net, Kanchi vck.