இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
கடந்த 05.06.2013 நடைபெற்ற காஞ்சி மாவட்ட செயற்குழு கூட்ட
தீர்மானத்தின்படி சூலை 7, 2013 அன்று தலைவர் எழுச்சித்தமிழர் தலைமையில்
மதுராந்தகம், கோழியாளம் கிராமத்தில் நடைபெறவுள்ள மாவீரன் தாத்தா ரெட்டைமலை
சீனிவாசன் அவர்களின் பிறந்தநாள் விழா - நாள் முழுதும் பண்பாட்டு அடையாள
விழா.
ஆகத்து 17 தலைவர் எழுச்சித்தமிழர் பிறந்தநாள், தமிழர் எழுச்சி நாளில் தலைவரின் பொன்விழா நிறைவு மாநாடு.
ஆகிய விழாக்களில் கலந்து கொண்டு சிறப்பிப்பது, அதற்கான விளம்பர உத்திகளை
எப்படி மேற்கொள்வது என்பது குறித்து நமது மாவட்டத்தின் அனைத்து ஒன்றிய,
நகர, பேரூர்களில் ஒன்றிய, நகர செயற்குழு கூட்டங்கள் நடைபெறும்.
அதன் வரிசையில் நாளை 17.06.2013 காலை 9 மணிக்கு காட்டான்கொளத்தூர்
ஒன்றியம், மறைமலைநகர் நகராட்சி, நந்திவரம் - கூடுவாஞ்சேரி பேருராட்சி
செயற்குழுக்கூட்டம் மறைமலைநகர், மறைமலைஅடிகளார் சாலை, விடுதலைச்
சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் காஞ்சி மாவட்ட துணை செயலாளர் கேது (எ)
தென்னவன் அவர்கள் ஒருங்கிணைப்பில் நடைபெறும்.
மதியம் 3 மணிக்கு
செங்கற்பட்டு ஒன்றியம் , நகர செயற்குழுக்கூட்டம் காஞ்சி மாவட்ட
இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை செயலாளர் செங்கை இரா.தமிழரசன் அவர்கள்
ஒருங்கிணைப்பில் நடைபெறும்.
அனைத்து மட்ட நிர்வாகிகளும் தவறாமல் பங்கேற்கவும்.
இவண்,
சூ.க.விடுதலைச்செழியன்,
மாவட்ட செயலாளர் - காஞ்சிவரம்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
----------------------------------------------------------
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
www.kanchithiruma.net, Kanchi Vck.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...