Sporty Magazine official website | Members area : Register | Sign in

14.06.2013, காஞ்சிபுரம் - வாலாசாபாத் ஒன்றிய, நகரங்களுக்கான செயற்குழுக்கூட்டம்.

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
கடந்த 05.06.2013 அன்று மதுராந்தகத்தில் நடைபெற்ற மாவட்ட செயற்குழு தீர்மானத்தின் படி ஒன்றிய, நகர, பெரூர்களுக்கான செயற்குழுக் கூட்டங்கள் நடைபெறும் என்று மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் அவர்கள் அறிவித்திருந்தார்.

 
 
 
 
 
அதன் வரிசையில் இன்று காஞ்சிபுரம் - வாலாசாபாத் ஒன்றியம், நகரங்களுக்கான செயற்குழு கூட்டம் வாலாசாபாத் சி.எம். திருமண அரங்கில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் அவர்கள் கருத்துரை வழங்கும் போது, சூலை -7 தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் அவர்கள் பிறந்தநாளுக்கான விழாவை முன்னெடுக்கும் விதமாக விளம்பர உத்திகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்றும், திரளான தோழர்களை குடும்பத்துடன் விழாவிற்கு அழைத்து வர வேண்டும் என்றும், ஆகத்து - 17 தலைவர் எழுச்சித்தமிழர் பொன்விழா நிறைவு மாநாட்டை சிறப்பிப்பது குறித்து சூலை -7 க்குப் பிறகு மாவட்ட செயற்குழுவை கூட்டி விவாதிப்போம் என்றும் பேசினார்.

செயற்குழு கூட்டத்திற்கு வாலாசாபாத் ஒன்றிய செயலாளர் உதயசூரியன், காஞ்சி ஒன்றிய அமைப்பாளர் ஸ்டான்லி, ஆகியோர் தலைமை வகித்தனர்.

காஞ்சி நகர செயலாளர் திருமாதாசன், வாலாசாபாத் நகர செயலாளர் அசோக்குமார் ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.
பாசறை செல்வராசு, இந்திரா அம்பேத்கர்வளவன், முத்தமிழன், மின்சார வாரியம் சேகர் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

மாவட்ட நிர்வாகிகள் கல்வி பொருளாதார விழிப்புணர்வு இயக்கத்தின் செயலாளர் தோழர் ஏ.கா.பாண்டியன், அ.ஊ.அய்.பேரவை தம்பிதுரை, ஊடக மையம் ஆதவன், தொ.வி. மு அகரம் முரளி, சமூக நல்லிணக்கபேரவை மு.க.திலிப், சுபாஷ், கதிர்ப்பூர் இளமாறன், ஆட்டோ பாஷா, மாணவரணி கண்ணன், மகளிர் விடுதலை இயக்கம் அஞ்சனம் ஆகியோர் பங்கேற்றனர்.

நிறைவில் காஞ்சி நகர பொருளாளர் நகர் பாலாஜி, வாலாசாபாத் நகர பொருளாளர் வேதகிரி ஆகியோர் நன்றி கூறினர்.

செய்தி:
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
www.kanchithiruma.net, Kanchi Vck.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...