Sporty Magazine official website | Members area : Register | Sign in

காஞ்சிபுரம் - வாலாசாபாத் பகுதிகளுக்கான செயற்குழு கூட்டம் 14.06.2013 வாலாசாபாத் நகரில் நடைபெறும்.

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :



காஞ்சிபுரம் - வாலாசாபாத் பகுதிகளுக்கான செயற்குழு கூட்டம் 14.06.2013 வாலாசாபாத் நகரில் நடைபெறும்.


 தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் ஆணையின்படி கடந்த 05.06.2013 அன்று மதுராந்தகம் நகரில் நடைபெற்ற விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் காஞ்சி மாவட்ட செயற்குழு கூட்டத்தின் தீர்மானத்தின் படி காஞ்சி மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர்களில் செயற்குழுக் கூட்டங்களை கூட்டி,

வருகின்ற சூலை 7 காஞ்சி மாவட்டம், கோழியாளம் கிராமத்தில் நடைபெறவுள்ள மாவீரன் தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்தநாளை சிறப்பிக்க செயல்திட்டங்களை உருவாக்கி களப்பணியாற்றுதல்,

ஆகத்து 17 தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் பொன்விழா நிறைவு மாநாட்டினை சிறப்பிக்க செயல்திட்டங்களை உருவாக்கி களப்பணியாற்றுதல்.

போன்றவற்றை வலியுறுத்தியும், நமது நிர்வாகிகளை விளம்பர உத்திகளை மேற்கொள்ள உசுப்பி விடுவது குறித்தும் விவாதிக்க அந்தந்த பகுதிகளில் செயற்குழுக் கூட்டங்களை கூட்டுவது. அதன் வரிசையில் வருகின்ற 14.06.2013 வெள்ளிக்கிழமை அன்று காஞ்சிபுரம் ஒன்றியம், நகரம், வாலாசாபாத் ஒன்றியம், நகரம் ஆகியவை ஒன்றிணைந்த செயற்குழு கூட்டம் வாலாசாபாத் CM திருமண அரங்கில் மாலை 1 மணிக்கு நடைபெறும். அனைத்து நிர்வாகிகளும் குறித்த நேரத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டுகிறேன்.

இவண்,
சூ.க.விடுதலைச்செழியன்,
காஞ்சி மாவட்ட செயலாளர்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
----------------------------------------------------------
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
www.kanchithiruma.net, Kanchi Vck.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...