Sporty Magazine official website | Members area : Register | Sign in

காஞ்சிபுரத்தில் விடுதலைச்சிறுத்தைகளால் வைக்கப்பட்ட புரட்சியாளர் அம்பேத்கர் சிலை இரவோடு இரவாக அகற்றம்.

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
காஞ்சிபுரத்தில் விடுதலைச்சிறுத்தைகளால் வைக்கப்பட்ட புரட்சியாளர் அம்பேத்கர் சிலை இரவோடு இரவாக அகற்றம்.

04.03.2013, காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சி ஒன்றியம், திருப்பருத்திக்குன்றம் கிராமத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் முகாம் செயலாளர் சிறுத்தை சீனு அவர்கள் ஒருங்கிணைப்பில் கிராம பொதுமக்களால் வைக்கப்பட்ட புரட்சியாளர் அம்பேத்கர் சிலை இரவோடு இரவாக காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினரால் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு சிலை இருந்த இடம், சிலைக்காக அமைக்கப்பட்ட பீடம் ஆகியவற்றையும் அகற்றி தரைமட்டமாக்கியது.

 
 


திருப்பருத்திக்குன்றம் முகாம் செயலாளர் சிறுத்தை சீனு உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதனைக் கண்டித்து கட்சியின் தோழர்கள் கிராம பொதுமக்களை அணிதிரட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திரண்டனர்.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாநில கருத்தியல் பரப்பு துணை செயலாளர் வழக்கறிஞர் த.பார்வேந்தன், பாசறை செல்வராசு, திருமாதாசன், ஊடக மையம் மதி.ஆதவன், விடியல் இரா.வெற்றித்தமிழன் உள்ளிட்ட நிர்வாகிகள் வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோரை சந்தித்து வழக்கை திரும்பப் பெற வேண்டியும் புரட்சியாளர் அம்பேத்கர் சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டியும் மனு அளித்தனர்.

பின்னர் நிர்வாகிகளுடன் வருவாய் துறையினரும் மாவட்ட காவல் நிர்வாகமும் வழக்கை திரும்பப் பெறுவதாகவும், சிலையை திரும்பக் கொடுப்பதாகவும் உறுதியளித்தனர்.

மேலும் இச்சம்பவத்தால் பரபரப்பான திருப்பருத்திக்குன்றம் கிராமத்தில் காவல் துறையினர் பாதுகாப்பிற்காக போடப்பட்டுள்ளனர்.

செய்தி:
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...