காஞ்சிபுரம் கூத்திரம்பாக்கம் கிராமத்தில் தொடரும் தீண்டாமைக் கொடுமை.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாசாபாத் ஒன்றியம், கூத்திரம்பாக்கம் கிராமத்தில் சுமார் 58 தலித் குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் அனைத்து சாதியினருக்கும் சொந்தமான முத்துமாரியம்மன் கோவில் கிராம பொது இடத்தில் அமைந்துள்ளது. இதே கிராமத்தில் பெரும்பான்மையாக சுமார் 500 குடும்பங்கள் ஆதிக்க வன்னிய சமூகத்து மக்கள் உள்ளனர். கடந்த 25 வருடங்களாக தலித் மக்களை புறக்கணித்துவிட்டு முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை நடத்து முயன்று வருகிறார்கள் திருவிழாவின் போது தலித் மக்களின் பங்குத் தொகையை வாங்க மறுத்து தலித் மக்கள் வசித்து வருகின்ற காலனி சேரிப் பகுதிக்குள் சாமியை கொண்டு வருவதில்லை. ஆதிக்க சமூகத்து மக்கள் வசிக்கின்ற ஊர்த்தெரு வீதிகளில் மட்டுமே சாமி உலா வரும்.
இந்த புறக்கணிப்பை எதிர்த்து தலித் மக்கள் போராடுகையில் மாவட்ட ஆட்சி நிர்வாகம் வழக்கம் போலவே ஒரு இரு தரப்பினரையும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறது. பேச்சுவார்த்தைக்கு ஆதிக்க சமூக வன்னியர்கள் தலித் மக்களின் கோரிக்கையை ஏற்க மறுத்து மாவட்ட ஆட்சி நிர்வாகத்துடன் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை.
மாவட்ட நிர்வாகமும் வழக்கம் போல 144 தடை விதித்து திருவிழாவை தடுத்து நிறுத்துகிறதே ஒழிய கிராமத்தில் நிலவும் தீண்டாமை சாதி கொடுமைகளை ஒழிக்க முன்வருவதில்லை.
இதனால் 1994 ஆம் ஆண்டு முதல் கூத்திரம்பாக்கம் கிராமத்தில் திருவிழா நடப்பதில்லை.
இப்படியான சூழ்நிலையில் வழக்கத்திற்கு மாறாக வருகின்ற ஏப்ரல் 13,14, 15 ஆம் தேதிகளில் முத்துமாரியம்மன் கோவிலுக்கு பின் புறத்தில் அமைந்துள்ள நவகிரகங்களுக்கு கும்பாபிஷேகம் என்ற பெயரில் தலித் மக்களை புறக்கணித்துவிட்டு திருவிழா நடத்த தடை செய்யப்பட்ட உள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்கு திருவிழா நடத்த ஆதிக்க சாதி இந்துக்கள் ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.
தலித் மக்கள் பங்குத் தொகையினை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இவர்களையும் இணைத்து திருவிழா நடத்த வேண்டும்.
தலித் மக்கள் வாழும் சேரி வீதிகளில் முத்துமாரியம்மன் சாமி வீதி உலா வர வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை ஏற்க மறுத்தால் ஆதிக்க சாதி இந்துக்கள் மீது தலித்துகளின் பொது ஆலய வழிபாட்டுக்கு தடை விதிக்கும் இக்கொடூர செயலுக்காக குடியுரிமைப் பாதுகாப்பு சட்டப் பிரிவின் கீழ் (PCR ACT) வழக்குப் பதிவு செய்யவும்.
தலித் மக்கள் மீது வன்முறையில் ஈடுபடுபவர்களை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கூத்திரம்பாக்கம் கிராம தலித் மக்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கி அவர்களின் இயல்பு வாழ்க்கையை அங்கே உறுதி செய்திட வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவு வழங்கிட வேண்டும் என்று காஞ்சி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கன்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர் ஆகியோரை சந்தித்து கிராம ஆதி திராவிடர் பகுதி வாழ் பொதுமக்களோடு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வழக்கறிஞர் பார்வேந்தன், பாசறை செல்வராசு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி பாரதி அண்ணா, தோழர் லாரன்சு, மக்கள் மன்றம் தோழர் மகேசு உள்ளிட்டோர் மனு அளித்தனர்.
செய்தி:
ஊடக மையம் காஞ்சிவரம் மாவட்டம்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.