காஞ்சி மாவட்ட சிறப்பு செயற்குழுக் கூட்டத்தில் எழுச்சித்தமிழர்.
ஏப்ரல்
14 மக்கள் ஒற்றுமை பேரணியில் காஞ்சிவரம் மாவட்டத்தில் இருந்து 25000
க்கும் மேற்பட்ட விடுதலைச்சிறுத்தைகள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும். -
தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் காஞ்சி மாவட்ட சிறப்பு செயற்குழுக்
கூட்டத்தில் கருத்துரை.
01.04.2013, காஞ்சிவரம் மாவட்ட சிறப்பு செயற்குழு கூட்டம் செங்கையில் நடைபெற்றது. இச்செயற்குழுவில் வருகின்ற ஏப்ரல் மாதம் 14 புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் பிறந்தநாள் அன்று நடைபெறவுள்ள மக்கள் ஒற்றுமை பேரணியில் காஞ்சிவரம் மாவட்டத்தில் இருந்து 25000 க்கும் மேற்பட்ட விடுதலைச்சிறுத்தைகள் பங்கேற்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
01.04.2013, காஞ்சிவரம் மாவட்ட சிறப்பு செயற்குழு கூட்டம் செங்கையில் நடைபெற்றது. இச்செயற்குழுவில் வருகின்ற ஏப்ரல் மாதம் 14 புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் பிறந்தநாள் அன்று நடைபெறவுள்ள மக்கள் ஒற்றுமை பேரணியில் காஞ்சிவரம் மாவட்டத்தில் இருந்து 25000 க்கும் மேற்பட்ட விடுதலைச்சிறுத்தைகள் பங்கேற்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
பேரணியில் கட்டாயம் கட்சி கொடிகளுடனும்,
நமது முழக்கங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் எந்த அசம்பாவிதங்களுக்கும்
இடம் கொடாமல் பெருந்திரளாக தோழர்கள் பங்கேற்க வேண்டும், காஞ்சி மாவட்ட
பொறுப்பாளர்கள் பட்டியல் ஏப்ரல் 14 க்கு பிறகு விரைவில் அறிவிக்கப்படும்
என்று தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் நிர்வாகிகளுக்கு கருத்துரை
வழங்கினார்.
காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் அவர்கள் தலைமை வகித்தார்.
மேலும் இச்செயற்குழுவில் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார், தலைமை நிலைய செயலாளர் பாவரசு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று பேசினர்.
மாவட்ட இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை செயலாளர் செங்கை இரா.தமிழரசன் அவர்கள் 32 கிராம் பொற்காசுகளும் செய்தி தொடர்பாளர் எழிலரசு அவர்கள் 18 கிராம் பொற்காசுகளும் வழங்கினர்.
மாவட்ட துணை செயலாளர்கள் தென்னவன், சிறுத்தை கிட்டு, இந்திரா அம்பேத்கர்வளவன், மேனகாதேவி, முகமது அனிபா, ரஜினி, பூவிழி, இளையவளவன், எழிலரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை செயலாளர் செங்கை இரா.தமிழரசன் வரவேற்று பேசினார்.
செங்கை நகர செயலாளர் அன்புச்செல்வன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் 1000 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
செய்தி:
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
செய்தி:
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.