Sporty Magazine official website | Members area : Register | Sign in

காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் புகைப்படம் வைக்க அனுமதி மறுப்பு.

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
 

ஏப்ரல் 15, காஞ்சிவரம் மாவட்டம், காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் புகைப்படம் வைக்க அனுமதி மறுத்துள்ளனர். இத்தகவலை நகராட்சி தலித் ஊழியர்கள் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினரிடம் கூறினர்.

உடன் நகராட்சி அலுவலகம் சென்ற கட்சியின் காஞ்சி ஒன்றிய நகர ஒருங்கிணைப்பாளர் பாசறை செல்வராசு, மின்சார வாரியம் சேகர், சந்திரகாந்தன், அரசு ஊழியர் ஐக்கியப் பேரவை மாவட்ட செயலாளர் தம்பிதுரை, கடலூர் மாவட்ட நிதி செயலாளர் தோழர் ராமச்சந்திரன், ஊடக மையம் மதி.ஆதவன் ஆகியோருடன் நகராட்சி ஊழியர்களும் ஆணையரை சந்தித்து கடுமையான வாதம் செய்தனர். அப்போதும் அனுமதி அளிக்க மறுத்து அ.தி.மு.க. நகர மன்ற தலைவர் மைதிலி திருநாவுக்கரசு அவர்களிடம் பேசிவிட்டு சொல்கிறேன் என்று தலித் சமூகத்தை சேர்ந்த நகராட்சி பெண் ஆணையர் ஆதிக்க சமூகத்தை சேர்ந்த நகர மன்ற தலைவர் மைதிலி திருநாவுக்கரசு அவர்கள் மீது உள்ள பயத்தினால் கூறினார். அனுமதி அளிக்க மறுத்துவிட்டால் காஞ்சி நகர மன்ற ஆணையரை கண்டித்தும் தலைவரை கண்டித்தும் போராட்டம் வெடிக்கும் என்று எச்சரித்து விட்டு வந்தனர்.

செய்தி:
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...