Sporty Magazine official website | Members area : Register | Sign in

காஞ்சிபுரத்தில் சாதி வெறியர்களின் அட்டூழியம்.

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
ஏப்ரல் 14, காஞ்சிவரம் மாவட்டம், காஞ்சி ஒன்றியம் முட்டவாக்கம் கிராமத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு திரும்பிய திருப்புட்குழி கிராம விடுதலைச்சிறுத்தைகள் சாதி வெறி கும்பலால் தாக்கப்பட்டனர்.



காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற தலித் இளைஞர்களை கைது செய்து வைத்துள்ளனர். மேலும் இன்று காலை பாலுச்செட்டிச்சத்திரம் பகுதியில் சாதி வெறியர்கள் திரண்டு வந்து புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளுக்கு வைக்கப்பட்ட விளம்பர தட்டிகளை கிழித்து அருவருப்பான முறையில் கோஷங்களை எழுப்பி புரட்சியாளராய் அவமானப்படுத்தியுள்ளனர்.





 
இதனைக் கண்டித்து பாலுச்செட்டிச்சத்திரம் காவல் நிலையத்தில் நூற்றுக்கணக்கான விடுதலைச்சிறுத்தைகள், புரட்சி பாரதம், BSP போன்ற கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் திரண்டு சாதி வெறியர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து கைது செய்யும்படி காவல் ஆய்வாளரிடம் மனு அளித்தனர். சாதி வெறியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கைது செய்யப்பட விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தோழர்களை விடுவிக்க வேண்டியும் கோரிக்கை வைத்தனர்.



இந்நிகழ்வில் காஞ்சி ஒன்றிய நகரஒருங்கிணைப்பாளர் பாசறை செல்வராசு, மாவட்ட துணை செயலாளர் இந்திரா அம்பேத்கர்வளவன், புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் SPC.தனசேகர், தலித் அன்னக்கிளி, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் திருமாதாசன், ஒன்றிய அமைப்பாளர் ஸ்டான்லி, மாவட்ட நிர்வாகிகள் தம்பிதுரை, ஊடக மையம் மதி.ஆதவன், திருப்புட்குழி நா. அம்பேத்கர், ஏ.வி.ராவணன், செஞ்சுடர், இளமாறன் ஆகியோர் கலந்து கொண்டு காவல் துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

செய்தி:
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...