Sporty Magazine official website | Members area : Register | Sign in

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாசாபாத் ஒன்றியம்,தொடூர் தலித்.முனுசாமி அவர்களுக்கு விடுதலைச்சிறுத்தைகளின் செம்மாந்த வீரவணக்கம்.

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :

கடந்த வருடம் 2012 ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம், வாலாசாபாத் ஒன்றியம், தொடூர் கிராமத்தில் தலித் இளைஞர்கள் ஒன்று கூடி புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கு பிறந்தநாள் விழா எடுத்து அப்பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர். இதனைபோருத்துக் கொள்ள முடியாத ஆதிக்க சாதி வன்னியர்கள், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த தோழர் முனுசாமி அவர்களை அடித்தே கொன்றனர்.

இப்பிரச்சினையை விடுதலைச்சிறுத்தைகள் கட்சியும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் முன்னெடுத்து போராடி வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்து தொடூர் தலித்.முனுசாமி அவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவியும், அவர் மனைவிக்கு அரசு வேலையும் பெற்றுத் தந்தனர்.

இந்த வழக்கு தான் SC/ST வன்கொடுமைகள் தடுப்பு சட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பதியப்பட்ட முதல் வழக்கு என்பது குறிப்படத்தக்கது.

இந்த ஆண்டு தொடூர் தலித்.முனுசாமி அவர்களின் முதலாவது நினைவு நாள். இந்நாளில் அவருக்கு அம்பேத்கர் பவுண்டேஷன் அவர் குடும்பத்திற்கு 5 லட்சம் நிதி அளிக்க உள்ளது.

இன்று மாலை 17.04.2013 தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தொடூர் தலித்.முனுசாமி அவர்களின் நினைவேந்தல் பொதுக்கூட்டத்திணை காஞ்சிபுரம் சின்னையன் சத்திரம் பகுதியில் நடத்துகிறது. இக்கூட்டத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன், வழக்கறிஞர் பார்வேந்தன், பாசறை செல்வராசு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

செய்தி:
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...