Sporty Magazine official website | Members area : Register | Sign in

காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் புகைப்படம் வைக்க அனுமதி மறுப்பு.

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
16.04.2013, காஞ்சிவரம் மாவட்டம், காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் புகைப்படம் வைக்க அனுமதி மறுத்துள்ளனர். இத்தகவலை நகராட்சி துப்புரவு ஊழியர்கள் அய்க்கிய பேரவை ஊழியர்கள் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினரிடம் கூறினர்.
 

நேற்று 15.04.2013 அன்று நகராட்சி ஆணையரை சந்தித்து பேசிய விடுதலைச்சிறுத்தைகள் நிர்வாகிகள் இன்று நகர மன்ற தலைவர் மைதிலி திருநாவுக்கரசு அவர்களை சந்தித்து பேசினர்.


 

 

 நகர மன்ற தலைவரும் ஒரு சிறிய புரிதல் கூட இல்லாமல், இத்தனை ஆண்டுகள் எங்கு போனீர்கள் இப்போது வந்துள்ளீர்கள் என்று கேட்டார். நமது காஞ்சி ஒன்றிய நகர ஒருங்கிணைப்பாளர் பாசறை செல்வராசு அவர்கள் நாங்கள் தலைவர் திருமாவளவன் அவர்களின் எழுச்சிக்கு பின்னர் தான் எங்களது மக்கள் தங்களுக்கான உரிமைகளை மீட்டெடுக்க உரிமையுடன் போராடுகிறார்கள் என்றும், நீங்கள் தலித் பெண் ஆணையரின் கடமையை செய்யவும் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள், உங்கள் மீதான பயத்தால் ஆணையரும் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் இருக்கிறார் என்றும் தமிழக அரசு ஆணையை காண்பித்து நீங்கள் புரட்சியாளர் அம்பேத்கர் புகைப்படத்தை வைக்காமல் இருப்பதனால் தான் எங்கள் ஊழியர்கள் வைக்கிறார்கள் என்று கடும் வாதம் செய்தார். அதன் பிறகும் கூட நகர் மன்ற தலைவர் அவர்கள் சிறுதும் மதிக்காமல் எங்களை அலைக்கழித்துவிட்டு நகராட்சி அலுவலகத்தை விட்டு வெளியே சென்றார்.

கடந்த 3 நாட்களாக புரட்சியாளர் அம்பேத்கர் படம் இருந்த இடத்திலேயே இருக்கிறது இதுவரை அனுமதியும் வழங்கப்படவில்லை. நாளை அனுமதி வழங்க மறுத்தால் நாங்கள் படத்தை சுவற்றில் மாட்டுவோம் என்றும் தேவைப்பட்டால் தலித் அமைப்புகளை திரட்டி நகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்றும்
நகர மன்ற தலைவரை எச்சரித்துவிட்டு வந்தனர்.

இப்பேச்சுவார்த்தையில் கட்சியின் காஞ்சி ஒன்றிய நகர ஒருங்கிணைப்பாளர் பாசறை செல்வராசு, அரசு ஊழியர் ஐக்கியப் பேரவை மாவட்ட செயலாளர் தம்பிதுரை, மின்சார வாரியம் சேகர், சந்திரகாந்தன், நகர செயலாளர் திருமாதாசன், கடலூர் மாவட்ட நிதி செயலாளர் தோழர் ராமச்சந்திரன், ஊடக மையம் மதி.ஆதவன் ஆகியோருடன் நகராட்சி ஊழியர்களும் நகர மன்ற தலைவரை சந்தித்து கடுமையான வாதம் செய்தனர்.

நாளை தான் முடிவு தெரியும். ஒரு தேசியத் தலைவர் குறிப்பிட்ட தலித் சமூகத்தில் பிறந்த ஒரே காரணத்தால் அரசானை இருந்தும் கூட அவர் புகைப்படத்தை வைக்க அனுமதி மறுக்கும் இந்த அரசை என்ன செய்வது.

வன்மையாக கண்டிப்போம் தோழர்களே.!

செய்தி:
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...