Sporty Magazine official website | Members area : Register | Sign in

காஞ்சிபுரம் பாரதிதாசன் மெட் ரிக் பள்ளி தாளாளர் அருண்குமாரை கண்டித்து மாணவர்களின் உரிமைகளுக்கான கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :

இன்று 17.04.2013,காலை 10 மணிக்கு காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகில் காஞ்சிபுரம் பாரதிதாசன் மெட் ரிக் பள்ளி தாளாளர் அருண்குமாரை கண்டித்து மாணவர்களின் உரிமைகளுக்கான கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


தரையில் உப்பை கொட்டி அதன் மீது மாணவர்களை முட்டி போடா வைப்பது,

தவறுகள் இழைத்தால் LKG, UKG படிக்கும் மாணவர்களை தோளில் சுமந்து கொண்டு சுற்ற வைப்பது,

மாணவ, மாணவிகளை இரவு முழுவதும் பள்ளியிலேயே தங்க வைத்து விடியற்காலை 4 மணிக்கு வீட்டிற்கு அனுப்பி விட்டு மீண்டும் காலை 8 மணிக்கு பள்ளிக்கு வர வேண்டும் கட்டாயப்படுத்துவது,

மாணவர்கள் மாணவிகளுடன் பேசினால் கடுமையான தண்டனை வழங்குவது,

குறிப்பிட்ட மாணவர்களுடன் சேர்ந்து கொண்டு மது அருந்துவது,

பள்ளி வளாகத்தில் RSS இயக்கத்தினருக்கு ஆயுத பயிற்சி வழங்குவது,

மாணவர்கள் மாணவிகளை மன நோயாளி போன்று நடத்துவது,

மாணவ, மாணவியர்க்கு இது போன்ற சொல்ல முடியாத அளவிற்கு மிகக் கொடுமையான தண்டனைகள் வழங்குவது,

போன்ற குற்றசாட்டுகளுக்காக காஞ்சிபுரம் பாரதிதாசன் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் அருண்குமாரை கிரிமினல் வழக்கில் கைது செய்ய வேண்டும், பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகளும் பங்கேற்று கண்டன உரையாற்றினார்கள்.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாநில கருத்தியல் பரப்பு துணை செயலாளர் வழக்கறிஞர் த.பார்வேந்தன், காஞ்சி ஒன்றிய,நகர ஒருங்கிணைப்பாளர் பாசறை செல்வராசு, ம.தி.மு.க. மகேசு, தமிழர் வாழ்வுரிமை கட்சி தீனன், மூத்த வழக்கறிஞர் அப்துல் ஹக்கீம், வழ.தேசாய், மக்கள் மன்றம் தோழர்கள் மகேசு, ஜெஸ்சி, தோழர் சமர்ப்பா, சினிமா இணை இயக்குனர் மகேந்திர வர்மா சட்டக் கல்லூரி மாணவர்கள் உட்பட 100 க்கும் பங்கேற்றனர்.

மக்கள் மன்றம் தோழர் வழக்கறிஞர் மேகலா நெறிப்படுத்தினார்.

ஆர்ப்பாட்டத்தின் ஏற்பாடுகளை மக்கள் மன்றம் இயக்கத்தினர் ஒருங்கிணைத்தனர்.

செய்தி:
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...