Sporty Magazine official website | Members area : Register | Sign in

தொடூர் தலித்.முனுசாமி அவர்களுக்கு நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடத்த காவல் துறை தடை.

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாசாபாத் ஒன்றியம், தொடூர் தலித்.முனுசாமி அவர்களுக்கு நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடத்த காவல் துறை தடை.









கடந்த வருடம் இதே நாள் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாசாபாத் ஒன்றியம் தொடூர் கிராமத்தை சேர்ந்த தோழர் தலித்.முனுசாமி அவர்கள் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு தொடூர் கிராமத்தில் ஏற்பாடு செய்திருந்தார். ஊர்த்தேருவை தாண்டி தான் சேரிக்குள் செல்ல முடியும். அதன்படி ஊர்த்தெரு வழியாக வந்த தோழர் தலித்.முனுசாமி அவர்களை ஆதிக்க சாதி வன்னியர்கள் அடித்தே கொன்று போட்டார்கள்.

இந்த விவகாரத்தை கையில் எடுத்த விடுதலைச்சிறுத்தைகளும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினரும் அவரது குடும்பத்திற்கு அரசிடம் இருந்து நிதியும், அவர் மனைவிக்கு அரசு வேலையும் பெற்று தந்தனர்.

உரிமைப்போராளி தோழர் தலித்.முனுசாமி அவர்களுக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்த அனுமதி கேட்டு மனு செய்திருந்தனர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர்.

அனுமதி மறுத்த காவல் துறையினர் சேரி மக்களுக்கு பாதுகாப்பு வழங்கிடாமல் மாறாக பெரும்பான்மையாக உள்ள சாதி இந்துக்கள் உள்ள ஊர்த்தெருப் பகுதிக்கு பலத்த பாதுகாப்பு வழங்கி இருந்தனர்.

ஒலிப்பெருக்கி வைத்துக்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டாலும் தொடூர் கிராமத்திற்கு சென்று தோழர் தலித்.முனுசாமி அவர்களின் வீடு வாசலில் நினைவேந்தல் கூட்டம் நடத்தினர்.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை தலைவர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் தோழர் லதா, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் தோழர் பாரதி அண்ணா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி காஞ்சி ஒன்றிய தலைவரும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் காஞ்சி நகர, ஒன்றிய ஒருங்கிணைப்பாளருமான பாசறை செல்வராசு, செயலாளர் தோழர் லாரன்சு, சி.பி.எம். காஞ்சி வட்டார செயலாளர் தோழர் ஆறுமுகம், துணை தலைவர் தோழர் பருத்திகுளம் லோகநாதன், வழ.தேவ அருள்பிரகாசம், வி.சி. வாலாசாபாத் ஒன்றிய அமைப்பாளர் உதய சூரியன், பொருளாளர் வேதகிரி, தோழர் இளம்பெரியார், ஊடக மையம் மதி.ஆதவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நினைவுரை ஆற்றினார்கள்.

செய்தி:
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...