மூன்று கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு காஞ்சி நகராட்சி அலுவலகத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் படம் வைக்க அனுமதி கொடுத்தனர்.

காஞ்சி நகராட்சி அலுவலகத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் படம் வைக்க கடந்த சில மாதங்களாக நகராட்சி துப்புரவு ஊழியர்கள் ஆணையரிடம் அனுமதி கேட்டு அலைந்து கொண்டிருந்திருனர். நகராட்சி நிர்வாகமும் மறுத்து வந்தது.
இந்த பிரச்சனையை கையில் எடுத்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கடந்த 2 நாட்களாக தொடர்ந்து ஆணையரிடமும், நகர மன்ற தலைவரிடமும் பேசி வந்தது. அனுமதிக்கு வாய்ப்பில்லாத காரணத்தால் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் துப்புரவு ஊழியர்கள் அய்க்கியப் பேரவையும் அரசு ஊழியர் அய்க்கியப் பேரவையும் இணைந்து கண்டன ஆர்ப்பட்டத்திற்கான துண்டறிக்கையை நகராட்சி அலுவலகத்தில் ஒட்டினர்.
இதன்பிறகு நகர மன்ற தலைவர் அவர்கள் மன்ற துணை தலைவர் தலைமையில் குழு அமைத்து விடுதலைச்சிறுத்தைகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.
இப்பேச்சுவார்த்தையில் போராடி வெற்றி கண்டனர் விடுதலைச்சிறுத்தைகள்.
மேலும் நகராட்சி துப்புரவு ஊழியர்களுக்கு ஞாயிற்றுகிழமைகளில் விடுமுறை வேண்டியும் பேச்சுவார்த்தையில் கோரிக்கை வைத்தோம். இது சம்பந்தமாக 10 நாட்களில் ஆணையரோடும் மன்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து அறிவிப்பதாக கூறினார் நகர மன்ற துணை தலைவர்.
இப்பேச்சுவார்த்தையில் கட்சியின் காஞ்சி ஒன்றிய நகர ஒருங்கிணைப்பாளர் பாசறை செல்வராசு, மாவட்ட துணை செயலாளர் இந்திரா அம்பேத்கர்வளவன், அரசு ஊழியர் அய்க்கியப் பேரவை மாவட்ட செயலாளர் தம்பிதுரை, கடலூர் மாவட்ட நிதி செயலாளர் தோழர் ராமச்சந்திரன், நகர செயலாளர் திருமாதாசன், ஒன்றிய அமைப்பாளர் ஸ்டான்லி, செயலாளர் டேவிட், துப்புரவு ஊழியர்கள் அய்க்கியப் பேரவையின் திருப்பாப்புலி, ஊடக மையம் மதி.ஆதவன் ஆகியோர் கலந்துகொண்டு கடுமையான போராட்டத்திற்கு பிறகு போராடி அனுமதி பெற்றனர்.
செய்தி:
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.