Sporty Magazine official website | Members area : Register | Sign in

சாதி ஆதிக்கத்தின் உறைவிடமாய் திகழும் காஞ்சிவரம் மாவட்டம், வாலாசாபாத் மாசிலாமணி முதலியார் மேல்நிலைப்பள்ளி.

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
காஞ்சிவரம் மாவட்டம், வாலாசாபாத் பகுதியில் அமைந்துள்ளது திரு.வா.தி. மாசிலாமணி முதலியார் மேல்நிலைப்பள்ளி.இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக திரு.D. ஜேஜி அவர்கள் உள்ளார். இவர் நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர். இதே பள்ளியில் கணித ஆசிரியராக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த திரு. M. கோவிந்தன் அவர்கள் கடந்த 14 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
 
 
கணித ஆசிரியர் கோவிந்தன் அவர்களையும், உடன் பணியாற்றும் தலித் பணியாளர்களையும், பயிலும் தலித் மாணவர்களையும் தலைமையாசிரியர் அவர்கள் ஒருமையில் பேசியும் சாதி பெயரைச் சொல்லியும் தொடர்ந்து அவமானபடுத்தி பேசி வந்திருக்கிறார்.
M.Sc, B.Ed படித்த ஒரு ஆசிரியரை " நீ போய் வகுப்பறையில் இருக்கும் குப்பைகளைப் பொறுக்கி சுத்தம் செய் " என்றும்
" பறப் பசங்கள வேலைக்கு சேர்த்ததே தப்பா போச்சு " என்றும் பேசி அவமானப்படுத்தி கணித ஆசிரியர் கோவிந்தன் அவர்களை மன உளைச்சலுக்கு உட்படுத்தி இருக்கிறார்.

ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமை இழந்த ஆசிரியர் கோவிந்தன் அவர்கள் இது சம்பந்தமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வாலாசாபாத் நகர செயலாளர் தோழர் அசோக்குமார் அவர்களிடம் எடுத்துக் கூறி இருக்கிறார்.

தோழர் அசோக்குமார் அவர்கள் கட்சியின் காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் மற்றும் மாநில கருத்தியல் பரப்பு துணை செயலாளர் வழ. த.பார்வேந்தன் அவர்களிடம் ஆலோசனைப் பெற்று காஞ்சி ஒன்றிய, நகர மேலிடப் பொறுப்பாளர் தோழர் பாசறை அ.செல்வராசு அவர்கள் ஒருங்கிணைப்பில் வாலாசாபாத் காவல் நிலையத்தில் சாதி வெறிப் பிடித்த பள்ளியின் தலைமையாசிரியர் ஜேஜி அவர்களை வன் கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி புகார் அளித்தனர். உடன் வாலாசாபாத் ஒன்றிய செயலாளர் தோழர் உதயசூரியன் உள்ளிட்ட ஏராளமான விடுதலைச் சிறுத்தைகள் காவல் நிலையத்தில் திரண்டனர்.

செய்தி :
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...