2013, பிப்ரவரி 10, காஞ்சிவரம் மாவட்டம், வாலாசாபாத் திரு.வா.தி. மாசிலாமணி முதலியார்
மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக திரு.D. ஜேஜி அவர்கள் உள்ளார். இவர்
நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர். இதே பள்ளியில் கடந்த 14 ஆண்டுகளாக கணித
ஆசிரியராக பணியாற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த திரு. M.
கோவிந்தன் அவர்களையும் உடன் பணியாற்றும்
தலித் பணியாளர்களையும், பயிலும் தலித் மாணவர்களையும் தலைமையாசிரியர்
அவர்கள் ஒருமையில் பேசியும் சாதி பெயரைச் சொல்லியும் தொடர்ந்து
அவமானபடுத்தி வந்ததை கண்டித்து வாலாசாபாத் காவல் நிலையத்தில் புகார்
அளித்து 10 நாட்களுக்கு மேல் ஆகியும் காவல் துறையினர் இதுவரை எந்த
நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்கள்.
இதனால் போராட்டத்தை முன்னெடுக்க போகும் உத்திகள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் அவர்கள் ஆலோசனையின் படி அரசு ஊழியர் ஐக்கியப் பேரவை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நேற்று 10.02.2013 நடைப்பெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்துக் கட்சியின் தலித் நிர்வாகிகளும், சமூக ஆர்வர்லர்களும் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு அ.ஊ.அ.பே மாவட்ட செயலாளர் தம்பிதுரை தலைமை தாங்கினார். தோழர் பாசறை செல்வராசு அவர்கள் கூட்டத்தை நெறிப்படுத்தினார். ஆசிரியர் கோவிந்தன், உடன் பணிபுரியும் ஆசிரியர் சரவணன், செ. ராமச்சந்திரன், தயாளன், ஆசூர் ராஜி, வேல்முருகன், ஆசிரியர் அமுதகீதன், தோழர் லாரன்சு, விடியல் இரா.வெற்றித்தமிழன், தோழர் சின்னப்பன், சம்பத் குமார், முத்தமிழன், ஊடக மையம் மதி.ஆதவன், காட்டான்கொளத்தூர் தோழர் திருமாறன், மற்றும் ஆசிரியர் கோவிந்தன் அவர்களிடம் பயின்ற மருத்துவர் தமிழ்க்கனல் உள்ளிட்ட பழைய மாணவர்களும், அனைத்துக் கட்சி தலித் நிர்வாகிகளும், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வாலாசாபாத் நகர செயலாளர் தோழர் அசோக்குமார் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தார். ஒன்றிய செயலாளர் உதயசூரியன் நன்றி கூறினார்.