Sporty Magazine official website | Members area : Register | Sign in

ராஜபக்சேவுக்கு எதிராக சென்னையில் கறுப்பு உடையுடன் டெசோ அமைப்பினர் கண்டன ஆப்பாட்டம்.

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக சென்னையில் கறுப்பு உடையுடன் டெசோ அமைப்பினர் கண்டனப் போராட்டத்தை நடத்தினர். ராஜபக்ஷவின் இந்திய வருகைக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.



தி.மு.க. தலைமையிலான தமிழீழ விடுதலை ஆதரவு அமைப்பான ‘டெசோ‘ வின் சார்பில் கறுப்பு உடையுடன் ஆப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து நேற்று காலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆயிரக்கணக்கானோர் கறுப்பு உடையில் குவிந்தனர்.

டெசோ அமைப்பைச் சேர்ந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சு.ப. வீரபாண்டியன், தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், சுப்புலட்சுமி ஜெகதீசன், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் கறுப்பு உடையில் பங்கேற்று கண்டன உரையாற்றின
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...