சென்னை - தர்மபுரியில் நடைபெற்ற கலவரம்
சம்பந்தமான விசாரணையை மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்ற வேண்டும் என்றுக்
கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உரையாற்றுகையில், ” பணத்திற்காக காதல் செய்து ஏமாற்றுகிறார்கள் என்பது பொய், காதல் என்பது தனிப்பட்ட நபரின் விருப்பம், எந்த சாதியினராக இருந்தாலும் தனிப்பட்ட விருப்பத்தில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது” எனத் தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில் , ” தர்மபுரியில் ஆறு மணி நேரம் தொடர்ந்து கலவரம் நடைபெற்றும், இதனைத் தடுக்க காவல்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” எனக் குற்றம் சுமத்தினார். ”தர்மபுரியில் காதல் திருமணம் செய்தவர்களுக்கு வயது குறைவு என்பது பொய்யான தகவல்” என்று தெரிவித்த திருமாவளவன், "தர்மபுரி கலவரம் சம்பந்தமான விசாரணையை மத்திய புலனாய்வுத்துறைக்கு மாற்ற வேண்டும்” என கோரிக்கை விடுத்தார். இந்தக் கலவரத்திற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் எனத் தெரிவித்த அவர், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தற்போது எந்தப் பாதுகாப்பும் இல்லாத சூழல் நிலவுவதாக குறிப்பிட்டார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் முன்னணி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.