Sporty Magazine official website | Members area : Register | Sign in

சாதி மறுப்பு காதல் திருமணம் தேச குற்றமா ?

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :



காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.க. விடுதலைச்செழியன் அவர்கள் அறிக்கை.

 சாதி மறுப்பு காதல் திருமணம் தேச குற்றமா ?
சாதி வெறியர்கள் தர்மபுரி மாவட்டம் நத்தம் காலனி, அண்ணா நகர், கொண்டாம்பட்டி கிராமத்து தலித் மக்களின் 400 வீடுகள் சாதி வெறியர்களால் தீக்கிரையாக்கப்பட்டது. 10 கோடி சொத்துக்களை சூறையாடி உள்ளனர். காட்டுமிராண்டி சாதி வெறியர்களை கண்டித்து தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் செ
ன்னையில் 19.11.2012 அன்று காலை 9 மணிக்கு மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம். நமது மாவட்டத்தில் உள்ள அணைத்து மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், முகாம் நிர்வாகிகள் இச்சம்பவத்தை கண்டித்தும் தலைவர் அறிவித்துள்ள போராட்டம் குறித்தும் சுவரொட்டி, தட்டி விளம்பரங்கள், துண்டறிக்கைகள் வெளியிட்டும் அடையாளப்படுத்தி தோழர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து சூடு சொரணையோடு அணி திரளவும்.

இவண்,

சூ.க. விடுதலைச்செழியன்
காஞ்சி மாவட்ட செயலாளர்.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...