Sporty Magazine official website | Members area : Register | Sign in

காஞ்சி மாவட்ட செயலாளர் செயல்வீரர் சூ.க.விடுதலைச்செழியன் அவர்களின் தாயார் இயற்கை எய்தினார்.

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் தோழர் சூ.க.விடுதலைச்செழியன் அவர்களின் அன்பு அன்னை திருமதி க.சாரதா அம்மையார் 8-11-12 அன்று இரவு 10 மணி அளவில் இயற்கை எய்தினார், அம்மையாரை இன்று மாலை 6 மணி அளவில் சூனாமேடு அடுத்த மணப்பாக்கம் மயானத்தில் அடக்கம் செய்தனர்.

ஆற்றல் மிகுந்த செயல்வீரரை நமக்கு ஈன்றெடுத்த அன்பு அம்மையாருக்கு விடுதலைச்சிறுத்தைகளின் செம்மாந்த வீரவணக்கம்.





வீரவணக்
க நிகழ்வில் பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன், இளஞ்சேகுவேரா,வழக்கறிஞர் பார்வேந்தன், கௌதம சன்னா, எழில் கரோலின்,கராத்தே பாண்டியன், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் பாலசிங்கம் மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், அனைத்து கட்சி நிர்வாகிகளும் பல்வேறு சமூக அமைப்பினரும் கலந்து கொண்டு அன்னைக்கு வீரவணக்கம் செலுத்தி அண்ணன் சூ.க.விடுதலைச்செழியன் அவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...