Sporty Magazine official website | Members area : Register | Sign in

காஞ்சிபுரத்தில் பஞ்சமி நில மீட்பு ஆர்ப்பாட்டம் !

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
காஞ்சிபுரத்தில் பஞ்சமி நில மீட்பு ஆர்ப்பாட்டம் !

எழுசித்தமிழர் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் கட்டளைகிணங்கி காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சூ.க. விடுதலைச்செழியன் அவர்கள் தலைமையில் மாவட்ட ஒன்றிய நகர தலைமைத் தளங்களில் பஞ்சமி நில மீட்பு ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் நகரத்தில் நகர செயலாளர் கோ.திருமதாசன் ஒன்றிய அமைப்பாளர் ம. ஸ்டான்லி தலைமையில் மாவட்ட துணை செயலாளர்
காஞ்சி ஆ.அம்பேத்கர்வளவன் ஒருங்கிணைப்பில் காலை 11 மணியளவில் நடைபெற்றது.







கண்டன உரை ஆற்றிய மாவட்ட செயலாளர் சூ.க. விடுதலைச்செழியன் அவர்கள் பஞ்சமி நிலங்களை மீட்டு எடுக்கும் வரை விடுதலைச் சிறுத்தைகள் ஓயமாட்டோம் என்றும் 1994 ம் ஆண்டு பஞ்சமி நில மீட்பு போராட்டக்களத்தினில் காவல் துறை துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான சான் தாமசு, ஏழுமலை குடும்பத்தார்க்கு 2 ஏக்கர் நிலம் வழங்கிட வலியுறுத்தியும் பேசினார்.



அத்துடன் நீலம் புயலில் பாதிப்படைந்த காஞ்சி மாவட்ட மக்களுக்கு தமிழக அரசு உடனடியாக நிவாரண உதவிகளை வழங்கிட வேண்டுமெனவும் பேசினார்.

வருகின்ற 7 ம் தேதி புதன்கிழமை பஞ்சமி நில மீட்பு போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் விதமாக காஞ்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்ட நிகழ்வில் தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் மதி.ஆதவன், நா.அம்பேத்கர், அழகியமுதல்வன், செஞ்சுடர், யூதா, ஏ.வி.ஆர், நா.இந்திரா, நகர, ஒன்றிய நிர்வாகிகள் நகர் அ. பாலாஜி, புல்லட் சதீசு, கண்ணன், இளமாறன், திராவிடன், தனிகாவளவன், ஆட்டோ பாட்சா, ஜீவா, ரேகா, போன்றோர் கலந்துகொண்டனர்.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...