கூடங்குளம் அணு உலையை மூடிட வலியுறுத்தி சட்டப் பேரவை முற்றுகை போராட்டம் !
கூடங்குளம் அணு உலையை மூடிட கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி,
ம.தி.மு.க, பா.ம.க, பெரியார் திராவிட கழகம், தமிழர் வாழ்வுரிமை கட்சி
உள்ளிட்ட கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பில் ஒத்த கருத்துள்ள கட்சிகள்
அனைத்தும் ஒரு சேர திரண்டு சட்டப் பேரவை முற்றுகை போராட்டத்தில்
கலந்துகொண்டு 5000 பேருக்கு மேற்பட்டோர் கைதாகினர்.

இதனைத் தொடர்ந்து அண்ணன் எழுச்சித்தமிழர் உள்ளிட்ட விடுதலைச் சிறுத்தைகள் 1000 கும் மேற்பட்டோர் கைதாகினர். இவர்களுடன் மகளிர் விடுதலை இயக்கத்தினரும் ஏராளமானோர் கைதாகினர். போராட்ட குழுவினரை கைது செய்து எழும்பூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்தனர். அத்திருமண மண்டபத்தில் அண்ணன் எழுச்சித்தமிழர் உள்ளிட்ட விடுதலைச் சிறுத்தைகளின் முன்னணி பொறுப்பாளர்கள் சிறுத்தை தோழர்களுக்கு கருத்தியல் பயிற்சி பாசறை போன்று அனைத்து தோழர்களையும் மேடையில் பேச வைத்து பயிற்சி அளித்தனர். அப்பயிற்சி பாசறையில் நமது தோழர்கள் பேசியதை கண்டு பா.ம.க கொள்கை விளக்க அணி தலைவர் தோழர் விண்ணரசு, பேராசிரியர் தீரன், கொளத்தூர் மணி போன்றவர்கள் வியந்து பாராட்டினர்.

இறுதியாக பேசிய அண்ணன் எழுச்சித்தமிழர் அவர்கள் கூடங்குளம் மட்டுமல்லாது கல்ப்பாக்கம் போன்று இந்தியாவில் உள்ள அனைத்து அணு உலைகளும் மனித குலத்திற்கு எதிரானவை அவற்றையும் இழுத்து மூட வேண்டும் என்று தமிழக அரசையும் மத்திய இந்திய அரசையும் கண்டித்து பேசினார்.

ஆரம்பத்தில் அனைத்துக்கட்சி
முற்றுகை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த நாம் தமிழர் சீமான் அவர்கள்
அனைத்துக்கட்சி போராட்ட களத்தினில் பங்கேற்காமல் தனியாக போராட்டம் நடத்தி
கைதானார். இந்த செய்தி குறித்து கைதாகியிருந்த அனைத்துக்கட்சி தோழர்களும்
கேள்வி எழுப்பினர். இது குறித்துஅனைத்துக்கட்சி தலைவர்களும் மேடையில்
பேசிக்கொண்டனர்.

போராட்ட மேடையில் அண்ணன் எழுச்சித்தமிழர் அறிவியல் சார்ந்த பல கருத்துகளை முன்னிறுத்தி பேசியது சிறப்பாக இருந்தது. அணு என்றால் என்ன? அணுமின் நிலையம் என்றால் என்ன? இதிலிருந்து மின்சாரம் எடுப்பது எப்படி? அனல் மின் நிலையம் என்றால் என்ன? எந்த வகையில் மின்சாரம் எடுப்பது? எது எளிய வழி? இவற்றில் பொருட்செலவு குறைவு? என்பன போன்ற பல கேள்விகளுக்கு விடையளிப்பது போன்று அறிவியல் சார்ந்த கருத்துகள் எளிய மக்களுக்கும் புரியும் வகையில் உரையாற்றினார்.