சென்னை 29, தமிழன் தொலைக்காட்சி நிறுவனரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளருமான கா.கலைக்கோட்டுதயம் அவர்களின் தாயார் திருமதி அன்னபழம் காசிஉதயம் அவர்களின் திருவுருவப்படத்திறப்பு நிகழ்ச்சி 29.11.2010 அன்று மாலை தமிழன் தொலைக்காட்சி நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு திருவுருவப்படத்தினை திறந்து வைத்து சிறப்பரையாற்றினார்.
அப்போது மண்ணுக்காகவும். இனத்திற்காகவும், தமிழகத்தில் பேரியக்கமாக வளர்ந்து வரும் ஒரே கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சிழ என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அதிகாரபூர்வமான தொலைக்காட்சியாக தமிழன் தொலைக்காட்சி விளங்குகிறது என்று புகழாரம் சூட்டினார். மனநிறைவான வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு முன்கூட்டியே அவர்களின் இறப்பு தெரிந்துவிடும் என்றும் மனநிறைவுடன் வாழ்ந்த உண்ணத தாய் அன்னபழம் என்றும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தனிசேனை அமைப்பின் நிறுவன தலைவரும், எழுத்தாளருமான நகைமுகன், தே.மு.தி.க. கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர்.பாஸ்கரன், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தலைவர் இரவீந்திரதாஸ். நிர்வாகி திருவேங்கடம், கலைஞர் தொலைக்காட்சி மேலாளர் பிளாரன்ட் பெரேரா, குட்நியுஸ் இயக்குனர் அஸ்வின் தைரியம், சென்னை பத்திரிகையாளர் சங்க தலைவர் அன்பழகன். உழைக்கும் பத்திரிகையாளர் கூட்டமைப்பின் தென்மண்டல ஒருங்கினைப்பாளர் அசுத்துல்லா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இந்த நிகழ்ச்சியில் மாலை தமிழகம் நாளிதழின் ஆசிரியர் சர்வோதயம், ஆதிகேச உதயம், திருமேனிஉதயம், திருகடலுதயம், திருஅருள் உதயம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னிஅரசு, தலைமை நிலையச் செய்தியாளர் ஆர்வலன், மாநில துணை தலைவர் இரா.செல்வம், தலைவரின் தனிச்செயலாளர் வெற்றிசெல்வன் உட்பட கட்சித் தொண்டர்களும், தமிழன் தொலைக்காட்சி தலைமை செய்தியாளர் சகாயராஜ், ஊழியர்கள் மற்றும் மாலை தமிழக நாளிதழின் ஊழியர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அதிகாரபூர்வமான தொலைக்காட்சியாக தமிழன் தொலைக்காட்சி விளங்குகிறது - எழுசித்தமிழர்!
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...
