சென்னை 01, வருகிற டிசம்பர் 26 ஆம் தேதி நடைபெற உள்ள தமிழர் இறையாண்மை மாநாடு தமிழரை தலை நிமிர வைக்கவும், தமிழருக்கென்று ஒரு நாடு வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் அமைய வேண்டும் என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தமிழன் தொலைக்காட்சியில் இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் வருகிற டிசம்பர் 6 ஆம் தேதி புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் அனைவரும் அந்நாளை தலித் இஸ்லாமியர்கள் எழுச்சி நாளாக கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும் வருகிற டிசம்பர் 26 ஆம் தேதி நடைபெற உள்ள தமிழர் இறையாண்மை மாநாடு வெகு சிறப்பாக நடத்த வேண்டும் என்றும், இந்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், தமிழரை தலை நிமிர வைக்கும் தமிழர்களுக்கு தனிநாடு என்ற கோரிக்கையை வலியுறுத்தும் வகையிலும் மாநாடு அமைய வேண்டும் என்றும் இதற்காக கட்சி உறுப்பினர்கள் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் வெள்ள நிவாரண நிதியாக ரூபாய் 100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதற்கும்;, அம்பேத்கார் குறித்த வரலாற்றுத் திரைப்படத்தை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட மானியம் ஒதுக்கிய முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழர் இறையாண்மை மாநாட்டிற்காக குழு ஒன்று நியமித்துள்ள தொல்.திருமாவளவன், நான்கு பிரிவுகளாக அதனை அமைத்து நிர்வாகிகளின் பெயர்க்களை வெளியிட்டுள்ளார்.
அப்போது விழா ஒருங்கிணைப்புக்குழுவில் தொல்.திருமாவளவன், உஞ்சை அரசன், கவுதமசென்னா, ஆர்வலன், ஆகியோரும், மாநாட்டு வரவேற்பு குழுவில் சிந்தனைச்செல்வன், ராமேசுனாதன், பாவரசு, பாவலன், தகடூர் தமிழ்ச்செல்வன், ஆகியோரும் விளம்பர குழுவில் கா.கலைக்கோட்டுதயம், முகமது யூசுப், வெற்றிச்செல்வன், அப்துல்ரகுமான் ஆகியோரும், மாநாட்டு மலர்க்குழுவில் ரவிக்குமார், வன்னியரசு, பாவலர் தணிகைச் செல்வன், நீலத்தமிழேந்தி, ஆதிரை ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளதாக தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 6-ஆம் நாளை தலித்-இஸ்லாமியர்கள் எழுச்சி நாளாக கடைப்பிடிக்க வேண்டும் - எழுச்சித்தமிழர் வேண்டுகோள்!
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...