Sporty Magazine official website | Members area : Register | Sign in

காஞ்சிபுரம் ஒன்றியம் நகரம் செவிலிமேடு பேரூராட்சி செயற்குழு கூட்டம்!

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
நவம்பர் 28, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களின் ஆணைப்படி நாடு முழுவதும் ஒரே நாளில் அனைத்து பகுதிகளிலும் செயற்குழு கூட்டங்கள் நடத்தவேண்டும் என்பதை ஏற்று காஞ்சிபுரம் ஒன்றியம் நகரம் செவிலிமேடு பேரூராட்சி சார்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இச்செயற்குழு கூட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் ஆ.அம்பேத்கர்வளவன் தலைமை வகித்தார், காஞ்சி நகர செயலாளர் கோ.திருமாதாசன் வரவேற்று பேசினார். காஞ்சி நகர, ஒன்றிய, செவிலிமேடு பேரூர் நிர்வாகிகள் மா.ஸ்டான்லி, நா.வல்லரசு, இளமாறன், ஏ.வி.ராவணன், நாகராஜ் முன்னிலை வகித்தனர், காஞ்சி மாவட்ட தீவிர உறுப்பினர் சேர்க்கை மேலிட பொறுப்பாளர் அரக்கோணம் கவுதம் சிறப்புரையாற்றினார்.

இந்த செயற்குழு கூட்டத்தில்
# எதிர்வரும் திசம்பர் 6, அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி அன்று அமைதி ஊர்வலம் நடத்தி அண்ணலை நினைவுபடுத்திடவும்,

# திசம்பர் 26, சென்னையில் எழுச்சித்தமிழர் தலைமையில் நடக்கவுள்ள தமிழர் இறையாண்மை மாநாட்டிற்கு காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 150வாகனங்களில் செல்வதென்றும்,

# தீவிர உறுப்பினர் சேர்க்கை கடைசி நாள் கெடு நீட்டிக்கபட்டுள்ளதால் அதனை பயன்படுத்தி இன்னும் ஐந்தாயிரம் பேரை சேர்ப்பதென்றும்,

# தற்ப்போதுள்ள நகர ஒன்றிய பேரூர் நிர்வாகிகள் தங்கள் பொறுப்பை புதுப்பிக்கும் விதமாக நம் தமிழ்மன் மாத இதழுக்கு ஆயுள் சந்தா செலுத்தவும், காலியாக உள்ள பொறுப்புக்களுக்கு விண்ணப்பம் செய்யவேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த செயற்குழு கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் சு.தம்பிதுரை, ஊடகமைய மாவட்ட செயலாளர் பருத்திகுளம் மதி.ஆதவன், நா.அம்பேத்கர், மகளீர் அணி நிர்வாகிகள் நா.இந்திரா, அல்லிராணி, ரேகா, கவுதமி உள்ளிட்ட திரளான விடுதலைச் சிறுத்தைகள் கலந்துகொண்டனர்.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...