Sporty Magazine official website | Members area : Register | Sign in

தமிழகத்தில் திமுக, அதிமுகவை அடுத்து அனைத்து தொகுதிகளிலும் வாக்கு வங்கியைப் பெற்றுள்ள கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - எழுச்சித்தமிழர்!

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
தமிழகத்தில் திமுக, அதிமுகவை அடுத்து அனைத்து தொகுதிகளிலும் வாக்கு வங்கியைப் பெற்றுள்ள கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - எழுச்சித்தமிழர்!

திருச்சியில் நடைபெற்ற விடுதலை சிறுத்தை கட்சியின் மண்டல செயற்குழு கூட்டத்தில் தலைமை தாங்கிய எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் பேசுகையில், "வருகிற
2011 ஆம் ஆண்டு, 'விடுதலைச் சிறுத்தைகள் ஆண்டு' என பிரகடனபடுத்தி இருக்கிறோம். நாம் சட்டபூர்வமான அங்கீகாரம் பெறவேண்டும். கடந்த 6 மாதங்களில் விடுதலை சிறுத்தைகள் உறுப்பினர் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ளது.

அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் விடுதலை சிறுத்தைகள் அங்கீகாரம் பெற வேண்டும். இதற்கு தலித் மக்களும், சிறுபான்மை மக்களும் விடுதலை சிறுத்தை கட்சியை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எந்தக் கட்சியும் செய்யாத அளவுக்கு, இளைஞர்களைத் திரட்டி தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத கட்சி விடுதலைச் சிறுத்தைகள் என்பதை நிரூபிக்கும் வண்ணம், சென்னை மெரீனா கடற்கரையில் வருகின்ற அக்டோபர் 10 ஆம் தேதி 'தமிழர் இறையாண்மை மாநாடு' நடைபெறுகிறது.

தமிழகத்தில் திமுக, அதிமுகவை அடுத்து அனைத்து தொகுதிகளிலும் வாக்கு வங்கியைப் பெற்றுள்ள கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தான் என்பதை ஊடகங்களும் அரசியல் தலைவர்களும் ஏற்க மறுக்கின்றனர்.

கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வாக்கு வங்கி தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால், ஆரம்பத்தில் இருந்தே விஜயகாந்த்தின் தேமுதிவின் வாக்கு வங்கி குறைந்துகொண்டே வருகிறது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 234 வேட்பாளர்களை நிறுத்தினார், விஜயகாந்த். இதில் தேமுதிக 200 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. ஒரு தொகுதியில் மட்டும் அவர் வெற்றி பெற்றார். ஆனால், ஒட்டுமொத்தமாக 8 சதவீத ஓட்டுக்களை பெற்றதாக அவர் கூறிக்கொள்கிறார்.

விடுதலை சிறுத்தைகளும் 200 தொகுதிகளில் போட்டியிட்டால் 12 சதவீதத்துக்கு மேல் ஓட்டுக்களைப் பெற்றிருக்க முடியும். ஆனால், அப்படி போட்டியிட விடுதலை சிறுத்தைகளிடம் பொருளாதார பலம் இல்லை.

ஆனால், விஜயகாந்த் கட்சியை திமுக, அதிமுகவுக்கு மாற்று சக்தியாக ஊடகங்கள் தூக்கிப்பிடித்து வருகின்றன.

சிலர் ஊழலை ஒழிப்பேன், வறுமையை ஒழிப்பேன் என்று முழங்கி வருகிறார்கள். இது கொள்கை அல்ல; இது ஒரு செயல் திட்டமாகும். கொள்கை என்பது உழைக்கும் ஏழை-எளிய மக்களுக்கு ஒரு குடியரசை உருவாக்குவது தான்.

ஒரு கட்சியை நடத்துபவர், தினந்தோறும் மக்களை 2 மணி நேரமாவது சந்திக்க வேண்டும். ஆனால், சில தலைவர்கள் அரை மணி நேரம் கூட ஒதுக்காமல் இருந்து வருகிறார்கள்," என்றார் தொல்.திருமாவளவன்.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...