ஆகத்து 31 எழுச்சித்தமிழர் அவர்களின் ஆணைக்கிணங்க எதிர்வரும் தமிழர் இறையாண்மை மாநாடு குறித்து காஞ்சி ஒன்றிய, நகரம் செவிலிமேடு பேரூர் சார்பில்மாவட்ட துணைச்செயலாளர் காஞ்சி.ஆ.அம்பேத்கர்வளவன் அவர்கள் தலைமையில் காஞ்சிபுரம் ராமாஸ் கேப் மேல் தளத்தில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இச்செயற்குழுவின் முடிவில் மாவட்டச் செயலாளர் செயல்வீரர். சூ.க.விடுதலைச்செழியன் அவர்கள் கருத்துரை வழங்கினார். தீவிர உறுப்பினர் சேர்க்கை பணியில் ரூபாய். 1 இலட்சத்திற்கு மேல் தலைமைக்கு பணம் செலுத்திய மாவட்ட துணைச்செயலாளர் காஞ்சி.ஆ.அம்பேத்கர்வளவன் அவர்கள் மாவட்டச் செயலாளரிடம் பாராட்டைப் பெற்றார். மேலும் இச்செயற்குழுவில் பாக்குப்பேட்டை பகுதியில் இருந்து தோழர் சதீசு அவர்கள் தலைமையிலும், குட்டைக்கரை பகுதியில் இருந்து தோழர் லோகன் அவர்கள் தலைமையிலும், பஞ்சுப்பேட்டை பகுதி ஓவியன் சிவா அவர்கள் தலைமையிலும், ஏரிவாக்கம் சி.எஸ்.சதா, தோழர் ராம்பிரசாத் அவர்கள் தலைமையிலும் 50 பேர் தி.மு.க வில் இருந்து தங்களை சிறுத்தைகளாய் இணைத்துக்கொண்டனர். இந்த இணைப்பு நிகழ்வு மாவட்ட ஊடக மைய்ய செயலாளர் பருத்திகுளம் மதி.ஆதவன் மற்றும் பருத்திகுளம் முகாம் தோழர்களின் சீரிய ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
தீர்மாணங்கள் :
1. அக்டோபர் 10 மண்ணுரிமை நாளில் சென்னையில் நடைபெறவிருக்கும் தமிழர் இறையாண்மை மாநாட்டில் காஞ்சி ஒன்றிய,நகரம் சார்பில் 5000 பேர் மிகவும் கட்டுப்பாடோடு கலந்து கொள்வது குறித்து.
2 . அக்டோபர் 1 எழுச்சித்தமிழர் தலைமையில் செங்கையில் கொத்தடிமை ஒழிப்பு முன்னணியின் மாநில அளவிலான துவக்க விழாவில் கலந்து கொள்வது குறித்து.
3 . செப்டம்பர் 18 மாவீரன் தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் அவர்கள் நினைவு நாளில் கலந்து கொள்வது குறித்து.
4 . தீவிர உறுப்பினர் சேர்க்கை பணியினை துரிதப்படுத்துவது குறித்து.
5 . தீவிர உறுப்பினர் சேர்க்கைக்குப் பின் புதிதாக கட்டமைக்கப்பட்ட முகாம்களில் கொடி ஏற்றுவது மற்றும் கல்வெட்டு அமைப்பது குறித்து.
6 . கட்சியின் தலைமைக்கு தன் விருப்ப கொடை வழங்குதல் குறித்து.
மேற்கண்ட தீர்மாணங்கள் தோழர்களின் கனத்த கரவொலியால் நிறைவேற்றப்பட்டது.
மேலும் இச்செயற்குழுவில் மாநில செயற்குழு உறுப்பினர் முத்தமிழன், நகர செயலாளர் திருமாதாசன், ஒன்றிய அமைப்பாளர் ஸ்டான்லி, நகர் பாலாசி, மாவட்ட நிர்வாகிகள் சு.தம்பிதுரை, அம்பேத்கர், அழகியமுதல்வன், நா.இந்திரா, மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள், பல்வேறு பகுதிகளில் இருந்தும் 350 சிறுத்தைகள் கலந்து கொண்டு செயற்குழுவினை சிறப்பித்தனர்.
தமிழர் இறையாண்மை மாநாட்டிற்கு காஞ்சி ஒன்றியம், நகரத்திலிருந்து 5000 சிறுத்தைகள் கலந்து கொள்ள வேண்டும் - செயற்குழுவில் தீர்மாணம் !
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...
