தமிழர் இறையாண்மை மாநாடு அக்டோபர் 10 பஞ்சமி நில மீட்புப் போராளிகள் சான் - தாமசு ஏழுமலை நினைவு நாள் அன்று நடைபெறும் ! - திருவள்ளூர் சிறப்பு மண்டல செயற்குழு கூட்டத்தில் எழுச்சித்தமிழர் அறிவிப்பு.
ஆகத்து 23 காஞ்சிபுரம், திருவள்ளூர், தென் சென்னை, மைய சென்னை,வட சென்னை உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கி சிறப்பு மண்டல செயற்குழு கூட்டம் திருவள்ளூரில்
மாலை 6 மணியளவில் எழுச்சித்தமிழர் தலைமையில் நடைபெற்றது.
இச்சிறப்பு மண்டல செயற்குழு கூட்டத்தில் தன் விருப்பக் கொடை, எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் ,தமிழர் இறையாண்மை மாநாடு, மற்றும் தீவிர உறுப்பினர் சேர்க்கை போன்ற மிக முக்கிய கட்சியின் செயல்பாடுகள் குறித்து எழுச்சித்தமிழர் அவர்கள் நிர்வாகிகளுக்கு கருத்துரை வழங்கினார்.
அடுத்த மாதம் செப்டம்பர் 26 அன்று நடைபெறுவதாய் இருந்த தமிழர் இறையாண்மை மாநாடு அக்டோபர் 10 பஞ்சமி நில மீட்புப் போராளிகள் சான் - தாமசு ஏழுமலை நினைவு நாள் அன்று நடைபெறும் என்றும் இனிவரும் காலங்களில் அக்டோபர் 10 பஞ்சமி நில மீட்புப் போராளிகள் சான் - தாமசு ஏழுமலை நினைவு நாள் மண்ணுரிமை நாளாக விடுதலைச் சிறுத்தைகளால் அனுசரிக்கப்படும் என்றும் எழுச்சித்தமிழர் அறிவித்தார். வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் நமது கட்சி அங்கீகாரம் பெற்றிட நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாய் இருந்து களப்பநியாற்றிட வேண்டுமென்றும் தோழர்களை கேட்டுக்கொண்டார்.
தீவிர உறுப்பினர் சேர்க்கை பற்றிய ஆவணங்கள் அந்தந்த மாவட்ட செயலாளர்களால் எழுச்சிதமிழரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
குறிப்பாக நமது காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் அவர்கள் தான் மாவட்ட செயலாளராய் பொறுப்பேற்றுக் கொண்டது முதல் நமது மாவட்டத்தில் அவர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், காவல் நிலைய முற்றுகை போராட்டங்கள், தான் நடத்திய மாவட்ட,நகர,ஒன்றிய செயற்குழு கூட்டங்களுக்கான தகுந்த ஆவணங்களை தலைவரிடம் சமர்ப்பித்து தலைவரின் பாராட்டை பெற்றார்.
இச்சிறப்பு மண்டல செயற்குழு கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் கலைக்கோட்டுதயம், தோழர் கௌதம சன்னா, இளஞ்சேகுவேரா, உஞ்சை அரசன், நீலவானத்து நிலவன், திலீபன்,பூவை வல்லரசு திருமா.நெட் அகரன், மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் பாலசிங்கம், தென் சென்னை இளஞ்செழியன், மைய சென்னை வீரமுத்து, வட சென்னை கபிலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
காஞ்சிபரம் மாவட்டம் சார்பாக மாவட்டத் துணை செயலாளர்கள் அம்பேத்கர்வளவன்,தென்னவன்,கிட்டு,மேனகாதேவி,பூவிழி, பொருளாளர் இளையவளவன், ஸ்டான்லி, திருமதாசன்,டேவிட்,அம்பேத்கர்,வடிவேல்,ஆதவன்,இளமாறன்,அழகியமுதலவன், ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
