''ராஜபக்ஷேயை சந்தித்துப் பேசுவதால் எந்தப் புண்ணியமும் இல்லை. இலங்கைக்கு தமிழக எம்.பி-க்கள் குழு போனபோது, முகாம்களில் சிக்கி இருக்கும் தமிழ் மக்களின் மறுவாழ்வுக்காக எத்தனையோ கோரிக்கைகளை வலியுறுத்திச் சொன்னோம். தலையாட்டிக் கேட்டுக் கொண்ட ராஜபக்ஷே,
ஒருமாத காலத்துக்குள் அதை எல்லாம் நிறைவேற்றுவதாகச் சொன்னார். அதன்பிறகு இந்திய அரசிடம் பேசுகையில் ஜனவரி மாதம் வரை அவகாசம் கேட்டார். அதுவும்கூட கடந்துவிட்டது.
அதுபோல், இந்திய-இலங்கை நாடுகளுக்கு இடையிலான புதிய ஒப்பந்தங்கள், மிருகவெறிப் பிடித்த இலங்கையின் வளர்ச்சிக்காக பயன்படுமே தவிர, தமிழர்களுக்கு எவ்வித நன்மையும் நடக்கப் போவதில்லை. இந்த ஒப்பந்தங்களில் உருப்படியான ஒரே விஷயம் இலங்கை சிறைகளில் இருக் கும் தமிழர்களை தமிழ்நாட்டுக்கு அனுப்புவது குறித்த உடன்படிக்கை மட்டும்தான்.
போர்க் காலத்தில் இந்தியா செய்த உதவிகளுக்கு நன்றிகூறும் முகமாகத்தான் ராஜபக்ஷே இங்கே வந்திருப் பதாகச் சொல்லப்படுகிறது. சர்வதேச அரங்கில் இலங் கையின் போர்க் குற்றங்களை அம்பலப்படுத்தி, நீதி கேட்க வேண்டிய இந்திய அரசு, அவருக்கு பட்டுக் கம்பளம் விரித்து, விருந்து கொடுத்து வரவேற்கிறது. இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் பரவிவிடுமோ என்கிற பயம் இந்தியாவுக்கு. அதனால்தான் இந்த உபசரிப்பு... உறவு கொண்டாடல்! அப்படியிருக்க இலங்கைத் தமிழர்களுக்கு எந்தக் காலத்திலும் நல்லது நடக்கப் போவதே இல்லை!'' என்றார் திருமாவளவன் மனம் வெறுத்து.
நன்றி:- ஜூனியர் விகடன் (16.06.2010)
ராஜபக்ஷேவை டெல்லியில் எம்.பி-க்கள் குழுவுடன் சந்திப்பதை புறக்கணித்தது ஏன்? - எழுச்சித்தமிழர் விளக்கம்!
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...
