Sporty Magazine official website | Members area : Register | Sign in

எழுச்சித்தமிழர் பிறந்தநாளை முன்னிட்டு மதுராந்தகம் நகர விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் கிரிக்கெட் போட்டி!

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
மதுராந்தகம் நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி, மெர்குரி பூக்கள் கிரிக்கெட் கிளப் சார்பில், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு, கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது.


இப்போட்டி, மதுராந்தகம் காந்தி நகர் அம்பேத்கர் விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது. தொடக்க விழாவுக்கு, நகர நிர்வாகி அப்பாதுரை தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகி கோவேந்தன், போட்டியை தொடங்கி வைத்தார். கிரிக்கெட் போட்டியில் காவாதூர், மாம்பாக்கம், சித்தாமூர், படாளம், சிங்கபெருமாள்கோயில், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட 40 கிராமங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...