சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம்
தொல்.திருமாவளவன் உள்பட
2000 க்கும் மேற்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் தமிழகம் முழுவதும் கைது
சிங்கள இனவெறியன் ராஜபக்சே வருகையை கண்டித்து இன்று (08.06.10)காலை 11 மணி அளவில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது . சென்னை ,நினைவு அரங்கம் முன் நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்தில் "திரும்பி போ ! திரும்பி போ !கொலை வெறியன் ராஜபகசேவே திரும்பி போ ! சிங்கள இனவெறியன் ராஜபக்சேவிற்கு சிவப்பு கம்பள வரவேற்பா ?" போன்ற முழக்கங்களை எழுச்சித்தமிழர் எழுப்ப , கூடியிருந்த விடுதலை சிறுத்தைகள் விண்ணதிர முழங்கினர் .
பின்னர் எழுச்சித்தமிழர் பேசியதாவது -
"இலட்சக்கணக்கில் எழத்தமிழர்களை கொன்று குவித்த சிங்கள இனவெறியன் ராஜபக்சே இன்று புதுதில்லி வருகிறான் . முள்ளிவாய்க்கால் பேரவலம் முடிந்து ஓராண்டாகியும் இலட்சகணக்கான தமிழர்கள் வதைமுகாம்களில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். அம்மக்களுக்கு எவ்வித தீர்வு திட்டத்தையும் இதுவரை முன்வைக்கவில்லை . அவர்கள் இன்னும் மீள்குடியமர்த்தம் செய்யப்படவில்லை

உடனடியாக எழத்தமிழர்கள் அவரவர் வாழிடங்களில் குடியமர்த்தம் செய்யப்படவேண்டும். இந்திய-சிங்கள ஆட்சியாளர்கள், தமிழீழ ஆதரவாளர்கள் உள்ளடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் .
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று இவ்வார்பாட்டம் நடைபெறுகிறது . இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மாண்புமிகு பிரதமர் மன்மோகன் சிங் அவர்களிடம் விடுதலை சிறுத்தைகள் சார்பில் மனு அளிக்கப்படும்".இவ்வாறு எழுச்சித்தமிழர் பேசினார்.
காவல் துறை அனுமதி தராததால் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைப்பற்றது .மாவட்ட செயலாளர்கள் வீரமுத்து ,கபிலன் , இளஞ்செழியன் முன்னிலை வகித்தனர்.பொதுசெயலாளர் கலைக்கோட்டுதயம் , மாநில நிர்வாகிகள் வன்னியரசு , மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன், இரா.செல்வம், எழில்.கரோலின் உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். ஆயிரக்கணக்கான விடுதலை சிறுத்தைகள் பெருந்திரளாக கலந்துக்கொண்டனர் .
எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் உள்படஅனைவரும் கைது செய்யப்பட்டனர்.