Sporty Magazine official website | Members area : Register | Sign in

பொது அமைதியைச் சீர்குலைக்கநினைக்கும் சமூகவிரோதிகளின் சதிமுயற்சிகளுக்கு இடமளிக்கவேண்டாம்! எழுச்சித்தமிழர் வேண்டுகோள்

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பரவாக்கோட்டை என்னுமிடத்தில் நேற்று (29-04-2010) இரவு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின்கொடியேற்று விழா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, மன்னார்குடியிலிருந்து அக்கிராமத்திற்குச் சென்றபோது சற்றும் எதிர்பாராத நிலையில் ஒருகும்பல் திடீரெனகற்களை வீசி வன்முறையில் ஈடுபட்டது.

இந்தக்கல்வீச்சில் எனக்கு எந்தப்பாதிப்பும் இல்லையென்றாலும், என்னுடன் வந்த விடுதலைச்சிறுத்தைகளின் கார்கள் சேதமடைந்தன. 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். சிறுத்தைஆனந்தன் என்பவர் தலையில் காயமுற்று கால்எலும்பு முறிந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்தக்கிராமத்தில் உள்ள தலித்துகள் மிகவும் சிறுபான்மையினராக உள்ளநிலையில் அவர்கள் முதன்முறையாக விடுதலைச்சிறுத்தைகள் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டதை பொறுத்துக் கொள்ளமுடியாத சாதி இந்துக்கள் கொடி ஏற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அங்குவைக்கப்பட்டிருந்த விளம்பரத்தட்டிகளைக் கிழித்துக்கொடிக்கம்பத்தை அகற்றியுள்ளனர் என்பது பின்னர் தெரியவந்தது. சனநாயகநாட்டில் யாரும் எந்தக் கட்சியிலும் உறுப்பினர் ஆகலாம் என்கிற போது, அங்குள்ள தலித்துகள் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியில் சேருவதை அனுமதிக்காமல் கொடியேற்றுவதற்காகச் சென்ற என்னோடு வந்த தோழர்கள் மீது இத்தகைய தாக்குதலை நடத்தியிருப்பது மிகவும் வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலித் மக்களை முன்னிறுத்திப் போராடுகிற கட்சி என்றாலும் ஒட்டு மொத்தத் தமிழர்களின் நலன்களுக்காகக் குரல் கொடுக்கும் தமிழ்த் தேசிய இயக்கமாகும். இத்தகைய அரசியல் புரிதல் இல்லாத ஒரு சிலர் விடுதலைச்சிறுத்தைகளைப் பகையாகக் கருதுவதும் தலித் மக்களுக்கு எதிரானவன் முறையில் ஈடுபடுவதும் வேதனைக்குரியதே ஆகும் .அரசியல் புரிதல் உள்ள ஆய்வாளர்களின் பார்வையில் விடுதலைச்சிறுத்தைகள் இயக்கம் ஒரு சாதியவாத இயக்கமல்ல என்பது உணரப்பட்டுள்ளது. எனவே இத்தகைய புரிதல் இல்லாதவர்கள் செய்யும்வன் முறைகளுக்காக விடுதலைச்சிறுத்தைகள் துளியளவும் உணர்ச்சிவயப்பட வேண்டாமெனவும், சாலைமறியல், ஆர்ப்பாட்டம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாமெனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். அதே கிராமத்தைச் சார்ந்த மற்றும் அப்பகுதிகளைச் சார்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மூத்ததலைவர் ஆர்.நல்லக்கண்ணு அவர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை விசாரித்த போதுதத் தமது வருத்தத்தையும் வெளிப்படுத்தினர். அத்துடன் அத்தகையவன் முறைப் போக்கையும் கண்டித்துள்ளனர். பொதுவான அரசியல் புரிதல் இல்லாத ஒரு சிலர் நடந்து கொண்டவன் முறைப் போக்குக்காக சமூகத்தில் பொதுஅமைதியைச் சீர்குலைக்க நினைக்கும் சமூகவிரோதிகளின் சதி முயற்சிகளுக்கு நாம் இடமளிக்கக்கூடாது. எனவே விடுதலைச்சிறுத்தைகள் அனைவரும் கட்டுப்பாடுகாத்து கட்சிப் பணிகளில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். இது தொடர்பாக ஆங்காங்கே சாலைமறியலில் ஈடுபட்டுகைது செய்யப்பட்டுள்ள விடுதலைச்சிறுத்தைகள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டுமென தமிழக அரசைக்கேட்டுக் கொள்கிறேன்..






வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...