இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :

உழைக்கும் வர்க்கத்தின் உன்னதத் திருநாளாம் மே நாள் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, தொழிலாளர் வர்க்கம் சுரண்டும் ஆதிக்க வர்க்கத்தின் கோரப்பிடியிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்ட உரிமை நாளே மே நாளாகும். உழைப்புக்கு காலவரையறையன்றி சுரண்டும் ஆளும் வர்க்கம் தொழிலாளர்களை - உழைக்கும் வர்க்கத்தை அடிமைப்படுத்தி உழைப்பை உறிஞ்சிக் கொளுத்த காலகட்டத்தில், உழைப்பதற்கு காலவரம்பு வேண்டுமென கோரிக்கை எழுப்பி ஒரு நாளைக்கு எட்டு மணி நேரமே வேலை செய்ய முடியும் என்ற உரிமையை வென்றெடுத்த நாள்தான் மே நாளாகும். இந்த உரிமையை வென்றெடுப்பதற்கான களத்தில் சிக்காக்கோ நகர வீதிகளில் ரத்தம் சிந்திய தொழிலாளர்களும் இவ்வுரிமைக்கான களத்தில் களப்பலியானவர்களுக்கும் இந்நாளில் விடுதலைச் சிறுத்தைகள் வீரவணக்கம் செலுத்துகிறது. இத்துடன் சுரண்டும் ஆளும் வர்க்கத்தின் ஆதிக்க வெறிக்கொடுமைகளிலிருந்து ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்தையும் மீட்பதற்கான விடுதலைப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவோமென உறுதியேற்போம்.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...