மறைமலை நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு விருதுகள் வழங்கும் விழா, இன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி தலைமை வகிக்கிறார்.
விழாவுக்காக அரண்மனை போன்ற மாநாட்டு பந்தல் அமைக்கும் பணி, கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது.
முதல்வர் கருணாநிதிக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்படுகிறது. மேலும், திக தலைவர் கி.வீரமணிக்கு பெரியார் ஒளி விருது, சமூக சேவகி கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு காமராஜர் கதிர் விருது, கவிக்கோ அப்துல் ரகுமானுக்கு காயிதே மில்லத் பிறை விருது, முனைவர் அலாய்சியசுக்கு அயோத்தி தாசர் ஆதவன் விருது, மறைந்த தேவநேய பாவாணருக்கு செம்மொழி ஞாயிறு விருது வழங்கப்படுகிறது.
விழாவுக்காக அரண்மனை போன்ற மாநாட்டு பந்தல் அமைக்கும் பணி, கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது.
தமிழகம் முழுவதும் இருந்து 75 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். முதல்வர் கலந்து கொள்வதால் ஐ.ஜி. துரைராஜ் தலைமையில் 6 மாவட்டங்களை சேர்ந்த 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
மாநாட்டு மேடை பணியை மாநில இளைஞர் அணி செயலாளர் மடிப்பாக்கம் வெற்றிச் செல்வன், மாவட்ட செயலாளர் விடுதலைச் செழியன், மாநில கொத்தடிமை மீட்பு அணி செயலாளர் கலைவடிவன், மாவட்ட துணை செயலாளர் தென்னவன், மாணவரணி துணை செயலாளர் அருள், மாவட்ட செய்தி தொடர்பாளர் எழிலரசு உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் முன்னின்று கவனித்து வருகின்றனர். மாநாட்டுக்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு, காட்டாங்கொளத்தூர் பகுதியிலும், மறைமலைநகர் நகராட்சி அருகிலும் இடவசதி செய்யப்பட்டுள்ளது.