Sporty Magazine official website | Members area : Register | Sign in

அழைக்கிறார் அண்ணன் !

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
ஏப்ரல் 14: புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள்
விருதுகள் வழங்கும் விழா
சிறுத்தைகள் கட்டுப்பாட்டுடனும் பாதுகாப்புடனும் வரவேண்டும்!
எழுச்சித்தமிழர் அண்ணன் தொல்.திருமாவளவன் அழைப்பு !

thiruma7copyhgcopy.jpg picture by abrahamthamizh

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 அன்று விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் தமிழகமெங்கும் சிறுத்தைகள் கொண்டாடும் ‘சித்திரை திருவிழா’ எனும் பெருவிழா கொண்டாடப்படுகிறது. ஆங்காங்கே புரட்சியாளர் அம்பேத்கரின் திருவுருவச் சிலைகளுக்கும் திருவுருவப் படங்களுக்கும் மாலைகள் அணிவித்து அஞ்சலி செலுத்துவதுடன் ஏழை எளியோருக்கு புத்தாடைகள் வழங்குவது பள்ளிக் குழந்தைகளுக்கு சீருடைகள் வழங்குவது போன்ற நற்பணிகளும் செய்யப்படுகிறது. காலை 9 மணி அளவில் கோயம்பேடு சந்தை அருகில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்படுகிறது. அத்துடன், கடந்த 2007ஆம் ஆண்டு முதல் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு விருதுகள் வழங்கும் விழாவும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு சென்னையை அடுத்துள்ள மறைமலை நகரில் நடைபெறுகிறது.

இவ்விழாவில், தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் அவர்களுக்கு அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு வழங்கியதை பாராட்டும் வகையில், ‘அம்பேத்கர் சுடர்’ என்னும் விருதும் ரூ.50,000 பொற்கிழியும் வழங்கப்படுகிறது. இவ்விருதினைப் பெறும் கலைஞர் அவர்கள் நிறைவாக சிறப்புரை ஆற்றுகிறார். மேலும், இவ்விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு ‘பெரியார் ஒளி’ விருதும், கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் அவர்களுக்கு ‘காமராசர் கதிர்’ விருதும், கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுக்கு ‘காயிதே மில்லத் பிறை’ விருதும், ஞான.அலாய்சியஸ் அவர்களுக்கு ‘அயோத்திதாசர் ஆதவன்’ விருதும் மறைந்த தமிழ் பேரறிஞர் தேவநேயப் பாவாணர் அவர்களுக்கு ‘செம்மொழி ஞாயிறு’ விருதும் வழங்கப்படுகின்றன. விருதுகளுடன் ரூ.50,000/- பொற்கிழியும் வழங்கப்படுகிறது. மாலை 4 மளியளவில் கலை நிகழ்ச்சியுடன் விழா தொடங்குகிறது. ஆகவே, விருதுகள் வழங்கும் விழாவுக்கு வருகை தருகிற தோழர்கள் பயணத்தின்போது பாதுகாப்புடனும் கட்டுக்கோப்புடனும் வந்து விழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவண்,
(தொல். திருமாவளவன்)
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...