விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் வீரவணக்கம் செலுத்த எழுச்சித்தமிழர் இலங்கை பயணம்
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரனின் தந்தையாரான வேலுப்பிள்ளை அவர்கள் காலமானதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இராணுவ காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் நேற்று இரவு காலமானதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாயணக்கார தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாக பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தமது 86 வது வயதில் நேற்று காலமானதாக பிரிகேடியர் குறிப்பிட்டுள்ளார்.
இவர் இயற்கையாக உயிரிழந்துள்ளதாக இராணுவப் பேசாளார் உறுதி செய்துள்ளார்.
கடந்த மே மாதம் நடைபெற்ற இறுதிக் கட்ட மோதல்களின் போது மோதல் வலயத்திலிருந்து இரானுவத்தினரிடம் சரணடைந்த வேளை வேலுப்பிள்ளை மற்றும் அவரது மனைவி ஆகியோர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கபபட்டிருந்தனர்.
இதனையடுத்து மேலதிக விசாரணகளுக்காக இவர்கள் கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தந்தை வெலுபிள்ளை அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக எழுச்சித்தமிழர் அவர்கள் 8/1/2010 நாளை காலை 5 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் இலங்கை செல்கிறார்.
எழுச்சித்தமிழர் அவர்கள் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தோழர்களும்,அனைத்து புலம்பெயர்ந்த தமிழர்களும் தந்தை வேலுப்பிள்ளை அவர்களின் உருவபடத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தவேண்டும் என அனைவரையும் கேட்டுக்கொண்டார்.
திரு. வேலுப்பிள்ளை அவர்களுக்கு வீரவணக்கம்
ஒப்புவமை இல்லாத மாவீரரை
தமிழினத்துக்குத் தந்த மாவீரர்!
- தொல். திருமாவளவன் அஞ்சலி
ஒப்புவமை இல்லாத மாவீரரை
தமிழினத்துக்குத் தந்த மாவீரர்!
- தொல். திருமாவளவன் அஞ்சலி
