Sporty Magazine official website | Members area : Register | Sign in

தொல்.திருமாவளவன் கவிதைகள் வெளியீட்டு விழா !

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
தனி தமிழீழம் அமையும் வரையில் விடுதலைச்சிறுத்தைகள் தமிழ‌கத்தில் விடுதலை புலிகளாக‌வே செயல்படுவோம் - எழுச்சித்தமிழர் !
 
 

சென்னையில் 5/1/2010 அன்று மாலை 6 மணியளவில் அண்ணா அரங்கத்தில் 1983 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை அவர் எழுதிய கவிதைகளை தொகுத்து முதல் பாகமாக தொல்.திருமாவளவன் கவிதைகள் என்னும் பெயரில் நூல் வெளியீடபட்டது .




இந்த நிகழ்ச்சியை தலைமை தாங்கியவர் மக்கள் பாவலர் இன்குலாப் ,வரவேற்புரை வன்னிஅரசு,உணர்ச்சிப்பாவலர் காசிஆனந்தன் நூலை வெளியீட அதனை தணிகைச்செல்வன் பெற்றுகொண்டார்.வாழ்த்துரை வழங்கியவர்கள் எழுத்தாளர் ரவிக்குமார் ,பழனிபாரதி, கபிலன் ,யுகபாரதி, நிகழ்ச்சி முழுவதையும் தொகுத்து வழங்கியவர் கவிஞர்.இளையகம்பன் ,எழுச்சித்தமிழரின் நூல் வெளியீட்டு விழவை பங்கேற்பதற்காக தமிழ் நாடு முழுவதிலிருந்தும் பல்லாயிரகண‌க்கான விடுதலைச்சிறுத்தைகள் மற்றும் மாநில,மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்
























உணர்ச்சிப்பாவலர் காசிஆனந்தன் அவர்கள் எழுச்சித்தமிழர் கவிதைகளை பற்றியும் ஈழத்தில் நம் சொந்தங்கள் படும் அவலங்களையும் ,மேதகு பிரபாகரன் அவர்கள் உயிரோடு இருப்பதகவும் மீண்டும் அங்கு ஈழ‌போர் வெடிக்கும் என உரையாற்றினார்.அண்ணா அரங்கமே அதிர வைக்கும் அளவிற்கு கையோசை காதை பிளந்தது

எழுச்சித்தமிழர் உணர்ச்சிபொங்க சுமார் 1 மணிநேரம் உரையாற்றினார்
தனி தமிழீழம் அமையும் வரையில் விடுதலைச்சிறுத்தைகள் தமிழகத்தில் விடுதலை புலிகளாகவே செயல்படுவோம் , ஈழத்தை யாரும் ஆதரித்தாலும் ,ஆதரிக்காமல் போனாலும் விடுதலைச்சிறுத்தைகள்அடுத்தகட்ட போரை மேதகு.பிரபாகரன் அவர்களின் தலைமையில் முன்னெடுத்துசெல்லும் என உரையாற்றினார்
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...