Sporty Magazine official website | Members area : Register | Sign in

ஓய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் பணி வழங்குகின்ற முயற்சியை அரசு கைவிட வேண்டும் - எழுச்சித்தமிழர் !

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை நிலை அமைப்பான அரசு ஊழியர் ஐக்கிய பேரவையின் மாநில செயற்குழுக் கூட்டம் சென்னை அண்ணா கலையரங்கில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணியில் அமர்த்துவதை விட படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

முன்னதாக நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், ஐக்கிய பேரவையின் மாநில செயலாளர் அரசாங்கம், துணை செயலாளர் பாவணன், நிதி செயலாளர் ஞானதிலகர் உட்பட பலர் பங்கேற்றனர்.

வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...