Sporty Magazine official website | Members area : Register | Sign in

சட்டமன்ற உறுப்பினர் - எழுத்தாளர் துரை.ரவிக்குமார் அவர்களின் நூல் வெளியீடு விழா !

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
அயோத்திதாசர் பண்டிதருக்கு பின்னால் அடுத்த வாரிசாக தோழர் எழுத்தாளர் ரவிக்குமார் விளங்குகிறார் - எழுச்சித்தமிழர் !



சென்னையில் 26/12/2009 அன்று மாலை 4 மணியளவில் தேவநேய பாவாணர் மாவட்ட மைய நூலகத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் பொது செயலாளராகவும் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினருமான‌ எழுத்தாளர் துரை.ரவிக்குமார் அவர்களின் நூல்வெளியீடு விழா நடைப்பெற்றது.













சூலகம் ,அவிழும் சொற்கள் ,பிறவழிப்பயணம் ,கற்றனைத்தூறும் ஆகிய 4 நூல்கள் உயிர்மை பதிப்பகம் மூலம் வெளியீடப்பட்டது .இந்த நிகழ்ச்சியை எழுச்சித்தமிழர் அவர்கள் தலைமை தாங்கினார் .அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலை வகித்தார்.சிறப்புரை வே.வசந்திதேவி ,கவிஞர் சுகுமாரன் ,அ.ராமசாமி ,இமையன் ஆகியோர் சிறப்புஅழைப்பாளராக கலந்துகொண்டனர் .பல்வேறுஎழுத்தாளர்களும்.தமிழ் ஆற்வலர்கள் மற்றும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாநில, மாவட்ட பொறுப்பாளர்களும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர் .எழுச்சித்தமிழர் அவர்கள் இந்த நிகழ்வில் சுமார் 45 நிமிடம் உரையாற்றினார் .நிகழ்ச்சியை சிறப்பித்தனர் .எழுச்சித்தமிழர் அவர்கள் இந்த நிகழ்வில் சுமார் 45 நிமிடம் உரையாற்றினார் .









இதில் பேசிய எழுச்சித்தமிழர் அவர்கள் தோழர்.ரவிக்குமார் அவர்கள் எங்கள் வீட்டுப்பிள்ளை என தெரிவித்தார். தாத்தா ரெட்டை மலைச்சினிவாசன் அவர்கள் பறையன் என்ற பத்திரிக்கை மூலம் தன்னை யார் என்று உலகுக்கு அடையாளம் காட்டியதுபோல தோழர் ரவிக்குமார் தலித் என்ற இதழை நடத்தி தன்னை யார் என்று இந்த உலகிற்கு உணர்த்திக்காட்டியிருக்கிறார்.அவரின் எழுத்து பணிகளால் விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு பெருமை அளிக்கிறது ,தோழர் ரவிக்குமார் பணிகள் மென்மேலும் தொடரவேண்டும் .நாங்கள் அயோத்திதாசர் பண்டிதருக்கு பின்னால் அடுத்த வாரிசாக தோழர் ரவிகுமார் விளங்குகிறார் என உரையாற்றினார்.

என் பெற்றோர்க்கு மேலாக தலைவர் நீங்கள் இருக்கிறீர்கள் அது எனக்கு பெருமை அளிக்கிறது - எழுத்தாளர் ரவிக்குமார்





இதில் பேசிய எழுத்தாளர் ரவிகுமார் அவர்கள் நான் 20 ஆண்டுகளாக பல்வேறு புத்தகங்களை எழுதியிருக்கிறேன் ஆனால் இந்த நிகழ்வுதான் நான் எழுதிய புத்தகங்கள் மேடையில் வெளியீடுவது முதல் முறை.என் பெற்றோர் இறந்துவிட்டனர் என் உறவினர்களும் இங்கு யாரும் வரவில்லை ஆனால் எழுச்சித்தமிழர் அவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது இப்பொழுது என் பெற்றோர்க்கு மேலாக தலைவர் நீங்கள் இருக்கிறீர்கள் அது எனக்கு பெருமை அளிக்கிறது ._ எழுத்தாளர் ரவிக்குமார் அவர்கள் உரையாற்றினார்.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...