நிலவுடமை ஆதிக்கத்தை எதிர்த்து போராடிய வெண்மணி போராளிகளின் நினைவு நாளை ஆண்டுதோறும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்ப்பில் நடத்திவருகிறது. இந்த ஆண்டும் பல்வேறு மாவட்டங்களின்வெண்மணி போராளிகளுக்குவீரவணக்கம் செலுத்தினர். காஞ்சிபுரம் மாவட்டம் செங்கையில் 25/12/2009 அன்று பிற்பகல் 1 மணியளவில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் துணைநிலை அமைப்புகளின் ஒன்றான
தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் கருப்புடை வீரவணக்க அணிவகுப்பு நடைப்பெற்றது . இந்த அணிவகுப்பு செங்கை பழைய பேருந்தில் முதல் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை வரை நடைப்பெற்றது இம்மாபெரும் அணிவகுப்பை தி.வ எழிலரசு தலைமை தாங்கினார் காஞ்சிபுரம் மாவட்டச்செயலாளர் சூ.க விடுதலைச்செழியன் ,தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில செயலாளர் முனைவர் சு.மாகதேவன் ஆகியோர் அணிவகுப்பை துவக்கிவைத்தனர்.
எழுச்சித்தமிழர் அவர்கள் இறுதியாக கருப்புடை வீரவணக்க அணிவகுப்பில் கலந்துகொண்டு நிலவுடமை ஆதிக்கத்தை எதிர்த்து போராடிய வெண்மணி போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினார் .இதில் பேசிய எழுச்சித்தமிழர் நிலவுடமை ஆதிக்கத்தை எதிர்த்து போராடிய போராளிகளின் வரலாற்றை பற்றி உரையாற்றினார் .மேலும் இளஞ்சிறுத்தைகள் அனைவரும் அரசியல் விழிப்புணர்வு பெற வேண்டும் என எழுச்சியோடு உரையாற்றினார் எழுச்சித்தமிழர் அவர்கள் சுமார் 40 நிமிடம் உரையாற்றினார்.