Sporty Magazine official website | Members area : Register | Sign in

கிறிஸ்துமஸ் விழா !

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
ஒடுக்குமுறையற்ற சமூதாயத்தை நாம் உருவாக்க வேண்டும் அப்போதுதான் நாம் உண்மையான விடுதலையை அடைய முடியும் - எழுச்சித்தமிழர் ! 

 

24.12.2009 மாலை 5 மணி அளவில் தியாகராயர் நகரில் அமைந்துள்ள‌ ஹோட்ட‌ல் பெனின்சுலாவில் விடுத‌லைச்சிறுத்தைக‌ள் க‌ட்சியின் துணை நிலை அமைப்புக‌ளில் ஒன்றான கிறிஸ்துவ சமூக நீதி பேரவையின் தலைமையில் சென்னையில் கிறிஸ்துமஸ் விழா நடத்தப்பட்டது. இதில் பங்கேற்றுப் பேசிய தொல்.திருமாவளவன் உண்மையான விடுதலை கிடைத்துவிட்டதா என்பதை விவரித்து பேசினார்.

இந்த விழாவில் கட்சியின் பொதுச் செயலாளர் கா.கலைக்கோட்டுதயம், வன்னிஅரசு, சைதை சேக்கப், இளஞ்செழியன், கபிலன், வீரமுத்து, பெருந்தகை, வள்ளரசு, புனிதஅரசு, ஜெயராணி மற்றும் பலர் பங்கேற்றனர். இதில் பேராயர்கள் தேவசகாயம், பிரகாஷ், சாம்சன், போதகர் ஜெபராஜ் ஆகியோர் முன்னிலையில் கிறிஸ்துமஸ் விழா விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...