நமது தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள்
ஆணையின்படியும் மாநில, மாவட்ட செயற்குழு தீர்மானங்களின்படியும் 1994 ஆம்
ஆண்டு மண்ணுரிமைக் கேட்டு தமிழக அரசின் துப்பாக்கிச் சூட்டிற்கு
உயிர்ப்பலியான பஞ்சமி நிலமீட்பு போராளிகள் சான்தாமசு, ஏழுமலை ஆகியோரின் நினைவாக அக்டோபர் 24 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை "மண்ணுரிமை வாரம்" என கடைபிடிக்க வேண்டும்.

வருகின்ற அக்டோபர் 27 ஆம் தேதியன்று நமது மாவட்டத்தின் 50 மைய இடங்களில் முகாம் தோழர்களை திரட்டிக் கொண்டு சுவரொட்டி, தட்டிகள் போன்ற விளம்பர உத்திகளுடனும் அவரவர் கைகளில் நமது கட்சிக் கொடிகளை ஏந்தி அரசுகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி, மாவட்ட தலைமை வழங்கியுள்ள துண்டறிக்கைகளையும், ஒவ்வொரு மையங்களிலும் 10 ஆயிரம் துண்டறிக்கைகளையும் அச்சிட்டு பொதுமக்களிடம் வழங்கி நமது மண்ணுரிமைக்கான பரப்புரையை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
தலைவர் எழுச்சித்தமிழர் தலைமையில்
பஞ்சமி நிலத்தை மீட்டெடுப்போம்!
பழந்தமிழர் குலத்தைப் பாதுகாப்போம்!!
இழந்த மண்ணை மீட்டெடுப்போம்!
இறுதிவரைக்கும் போர்த்தொடுப்போம்!!
இவண்,
சூ.க.விடுதலைச்செழியன்
காஞ்சி மாவட்ட செயலாளர்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
-----------------------------------------------------------------------------
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.